பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டும் என்ருர். ஹைதராபாத்தில் சந்தித்துப் பேசிளுேம். அதன் பயஞகவே இது அகில இந்தியத் திட்டமாக உருவா யிற்று. இதுதான் என் திட்டம் உருவான கதை' என்ருர். - 'பதவியிலிருந்து விலகுவதால் தங்களுக்குத் திடீரென்று ஏதேனும் அசெளகரியங்கள் ஏற்படாதோ?” -

'எனக்கென்ன அசெளகரியம்? வீடு சர்க்கார் கொடுத்த தில்லை. காரும் என்னுடைய சொந்தக் கார்தான். வீட்டு வாட் கையும், வரியும் போக எனக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதில், காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்காக டில்லித் குப் போனல், விமான டிக்கட் அறுநூறு ரூபாய் செலவழிந்து விடும். போக நானூறு ரூபாய் மிஞ்சும். என் துணிமணிச் செலவு, தாயாருக்கு அனுப்பும் பணம் போக மிச்சப் பணத்தை ஏழைப் பிள்ளைகளுக்குச் சம்பளம் கட்டி விடுகிறேன். இனிமேல் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்குப் போளுல் என்னல் விமான டிக்கெட் வாங்க முடியாது. காங்கிரஸ் ஸ்தாபனந்தான் வாங் கித்தர வேண்டும். முதல் மந்திரி என்பதற்காக நான் எங்கே போனலும், வந்தாலும் இர்ண்டு கான்ஸ்டபிள்கள் வந்து நிற். பார்கள். இனி அவர்கள் வரமாட்டார்கள். நான் பதவியை விடுவதால் ஏற்படக் கூடிய வித்தியாசம் இவ்வளவுதான்' என்ருர், -

'திரு. பக்தவத்சலம் அவர்களுக்கு இனி வேலை அதிகமாகி விடாதா? அவருக்கு உதவியாக மேற்கொண்டு புதிய மந்திரி. கள் யாராவது நியமிக்கப் படுவார்களா?' -

'இராது; ஆர்.வி. இருக்கிருர், கக்கன் இருக்கிருர், ராமையா இருக்கிரு.ர். இவர்களெல்லாம் பழைய மந்திரிகள். திறமைசாலிகள். அநுபவசாலிகள். புதிய மந்திரி என்ருல் உடனே 'நீ நான் என்ற போட்டி ஏற்பட்டு விடும். அதிலிருந்து. பல சங்கடங்கள் எழும். ஆதலால் மந்திரி. சபையில் மாற்றமே இருக்காது. வேண்டுமானல் காரியதரிசிகளை நியமித்துக் கொள் ளலாமே? மந்திரிகள் எதற்கு?' என்ருர்.

மணி ஒன்று. விமானம் சென்னையை நெருங்கிக் கொண் டிருந்தது.

134

134