பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“இன்றைக்கு ஏன் தெரியுமா விமானம் இவ்வளவு லேட்டா கப் புறப்பட்டது? நாகலந்து நாட்களுக்கு முன் ஆக்ராவுக்கரு கில் விமான விபத்து ஏற்பட்டதல்லவா? அதனால் இப்போது உஷாராகப் பழுது பார்க்கிருங்க என்று நினைக்கிறேன்" என்று கூறியபடியே,பெல்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டார்.கண்ணாடி வழியாகக் கீழே பார்த்தபடியே உட்கார்ந்திருந்தவர், "அதோ பார்த்தீர்களா, பெரம்பூர் ரயில்வே ஒர்க் ஷாப்" என்றார்.

நான் எட்டிப் பார்த்தேன். அதற்குள் அது மறைந்து போய் விட்டது.

"அதோ பாருங்கள் சைதாப்பேட்டை பிரிட்ஜ், சலவைத் தொழிலாளிங்க துணி துவைத்துக் கொண்டிருக்கிருங்க”

"ஆமாம்; அதோ பாருங்க, என்னுடைய சட்டைகூட அங்கே தெரிகிறது" என்று சொல்ல எண்ணினேன். ஆனால் சொல்லவில்லை.

இதற்குள் விமானம் கீழே இறங்கி விட்டது. விமானத்திலிருந்து இறங்கியதும்,"என்...ன?"என்றார் என்னைப பார்த்து.'நான் அடுத்த அலுவலை கவனிக்கச் செல்கிறேன்.வரட்டுமா? என்பதுதான் அதன் பொருள்.

முற்றும்

135