பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனக்குள்ள கவலையெல்லாம் இந்த நாட்டைப் பற்றித் தான்.நாம் தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் பறிபோயிடக் கூடாதேங்கறதுதான்.

சிவப்புப் பணம் நம் நாட்டிலே நிறைய நடமாடுதுன்னு சொல்றாங்க. அப்படின்கு அது ஆபத்தில்லையா?அந்தப் பணம் எப்படி இந்த நாட்டுக்குள்ளே வருதுன்னு விஷயம் தெரிஞ்சவங்களை விசாரிக்கணும்."

'இந்திரா காந்தி ப்ரோ ரஷ்யாவா, ப்ரோ அமெரிக் காவா?”

"அவங்க ப்ரோ இந்திரா. அந்த அம்மாவுக்குப் பதவி தான் முக்கியம்.'

"நீங்கதானே அவங்களைப் பிரதமராப் போட்டிங்க? இப்ப நீங்களே வருத்தப்படறீங்களே !'

"நேருவின் மகளாச்சே, நேருஜியுடன் கூடவே இருந்த தாலே 'இந்த நாட்டு அரசியலை நல்லா கவனிச்சுப் பக்குவப் பட்டிருப்பாங்க, நல்ல முறையிலே நாட்டை ஆளுவாங்க, அதுக்கேத்த திறமையும், மனப்போக்கும் இருக்கும்னு நினைச் சுத்தான் போட்டேன்.இப்படி ஆகும்னு கண்டேன: நாட்டையே அடகு வைச்சுடுவாங்க போலிருக்கே!" கோபமும், எரிச்சலும் வருகின்றன. அவருக்கு. பேச்சிலே ஒரு வேகம், தவிப்பு...

இடது கையால் பிடரியைத் தேய்க்கிறார். வலது கையால் தலையைத் தடவிக் கொள்கிறார். சட்டையின் விளிம்பைச் சுருக்கிச் சுருக்கி மேலே தோள்பட்டைவரை தூக்கிக் கொண்டு போய்ச் சேர்க்கிறார்."உம், இருக்கட்டும்' என் மீண்டும் தாமாகவே பேசத் தொடங்குகிறார்.

"எனக்கு ஒண்ணுமில்லே;இந்தத் தேசம் பாழாப் போகுதே, இதை எப்படிக் காப்பாத்தப் போறோம்னுதான் கவலையாயிருக்கு. நான் என்ன செய்வேன்?"

இதற்குள் எதையோ நினைத்துக் கொண்டு, "உம், சரி, பார்ப்பம்' என்று அழுத்தமாகச் சொல்லி விட்டுக் குழந்தை போல் சிரிக்கிறார்.எளிமையும், தூய்மையும் நிறைந்த காந்திஜியின் கபடமற்ற சிரிப்பை நினைப்பூட்டுகிறது அந்தச் சிரிப்பு.

14