பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்றார்னு விளங்கல்லே. இப்போதுதான் புரியுது.அப்பவே கலைச்சிருந்தா இப்ப புதுசாவே இரண்டு பலம் வாய்ந்த கட்சிகள் தோன்றி வளர்ந்திருக்கும்.அது நாட்டுக்கும் தில்ல தாயிருந்திருக்கும்.

சாஸ்திரியின் காரியங்களெல்லாம் முடிஞ்ச இரண்டு நாளைக்கெல்லாம் இந்திரா காந்தி என்னிடம் பேச வந்தாங்க,தான் பிரதமரா வர முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கே இல்லை அப்போது. இருந்தாலும்,மனசுக்குள்ளே ஓர் ஆசை இருந்திருக்கும்.விஷயத்தைத் தெரிஞ்சிக்கிட்டுப் போவோம்னு வந்தாங்க போலிருக்கு.

எப்படி இருக்கு நிலைமை,என்ன செய்யப் போறீங்கன்லு பொதுவாப் பேச்சை ஆரம்பிச்சாங்க. என் மனசிலே இருக்கிறதை நான் சொல்லல்லே.

நீங்க பேசாமல் வீட்டிலே போய் உட்காருங்க;நான் கூப்பிட்டனுப்பிச்சா அப்ப வாங்க;அதுவரைக்கும் நீங்க யார்கிட்டேயும்,எதுவும் பேசாதிங்க:உங்ககிட்டே யாராவது வந்து ஏதாவது கேட்டாங்கன்னா காங்கிரஸ் பிரளி டெண்டைப் போய்க் கேளுங்கன்னு சொல்லி அனுப்பிச் சுடுங்கன்னேன்.

அடுத்தாப்பலே பத்திரிகைக்காரங்க போய் அந்த அம்மாவைக் கேட்டப்போ,'எனக்கு ஒண்னும் தெரியாது.காம்ராஜ் என்னைப் பேசாமல் வீட்டிலே போய் உட்கார்ந்திருக்கச் சொல்லி விட்டார். அவரைப் போய்க் கேளுங்க'ன்னு பதில் சொல்லியிருக்காங்க.அது பேப்பர்லேகூட வந்ததா ஞாபகம்" என்றார். "இந்திராவைப் போடலாம்னு ஏன் நினைச்சிங்க? மொரார்ஜி தேசாயே வந்திருக்கலாமே?"என்றேன்.

"நமக்குள்ளே போட்டியில்லாமல் ஒற்றுமையாக ஒரு முடிவு எடுக்கணும்னு என் ஆசை.அப்ப சில பேர் போட்டி போடணும்னு நினைச்சாங்க காரியக்கமிட்டி அங்கத்தினர்களும் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டாங்க.எம்.பி.க்கள், முதலமைச்சர்கள், பிரதேசக் காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரையும் தனித்தனியாக் கலந்து பேசினேன்.என் மனசிலே

16