பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரா காந்தியைப் போடலாம்னு ஒர் அபிப்பிராயம் இருந்தது. ஆனால் நான் அதைக் கொஞ்சங்கூட வெளியிலே காட்டிக்கல்லே. இந்திராவை ரொம்பப் பேர் வேண்டாம்னு சொன்னாங்க. ஆனாலும் அவங்களோடெல்லாம் நான் ரொம்ப நேரம் 'டிஸ்கஸ்' பண்ணினேன். அப்புறம் அவங்க அபிப்பிராயத்தை மாத்திக்கிட்டாங்க. ஆனால் மொரார்ஜி ரொம்பப் பிடிவாதமா இருந்தாரு. எம்.பிக்களுக்கெல்லாம் லெட்டர் எழுதினார். நான் அவர் வீட்டுக்குப் போய் போட்டிபோட வேண்டாம், வாபஸ் வாங்கிக்குங்கன்னு கேட்டுக்கிட்டேன். அவர் பிடிவாதமா வாபஸ் வாங்க மறுத்துட்டார். வேறு வழியில்லாமல் மறுநாள் பார்ட்டியில் வைத்து வோட்டெடுத்தோம். இந்திராவுக்குத்தான் மெஜாரிடி கிடைச்சுது.”

"சரி, இந்திராவைப் பிரதமராக்கினீங்களே, அதுக்கப்புறம் முக்கியமான பிரச்னைகளில் உங்களைக் கலந்துகிட்டுத் தானே இருந்தாங்க ?”

"ஆமாம், கலந்துக்கிட்டுத்தான் இருந்தாங்க. ஆனால் நம்ம நாட்டைப் பாதிக்கிற ஒரு முக்கியமான விஷயத்திலே என்னைக் கலந்துக்காமல் அவசரப்பட்டுட்டாங்க. திடீர்னு நாணய மதிப்பைக் குறைக்கப் போறதா முடிவு எடுத்தது பெரிய, தப்பு. நான் அப்ப மெட்ராஸிலே இருந்தேன். இந்திரா காந்தி எனக்குப் போன் பண்ணி டில்லிக்கு வரச்சொன்னங்க. நானும் போனேன். என்கிட்டே விஷயத்தைச் சொன்னாங்க.

அப்படிச் செய்யக் கூடாது. ரொம்பத் தப்பு. வெளிநாட்டு வியாபாரம் கெட்டுப் போகும். வெளிநாட்டிலே கோடி கோடியாக் கடன் வாங்கியிருக்கோம். அதை இரண்டு மடங்காகத் திருப்பிக் கொடுக்க வேண்டி வரும். டிவேல்யுவேஷன் அவசியந்தான்னு நினைச்சா அதைப் பற்றிப் பொருளாதார நிபுணர்களைக் கலந்து பேசி முடிவு எடுங்க. அவசரப் படாதீங்க. ஆறு மாசம் கழிச்சு செய்யலாமேன்னுகூடச் சொல்லிப் பார்த்தேன்..."

"அதுக்கு என்ன சொன்னாங்க?"

"இல்லே, காபினெட் மெம்பர்ஸ் ஒத்துக்கிட்டாங்கண்ணு சொன்னாங்க.காபினெட் ஒத்துக்கிட்டா மட்டும் போதாது.

17