பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எக்ஸ்பர்ட்டுங்ககிட்டே டிஸ்கஸ் பண்ணுங்கன்னு சொன்னேன். என் பேச்சைக் கேட்கல்லே. அப்பத்தான் இந்த அம்மாவைப் பற்றி எனக்குப் பயம் வந்துட்டுது. நாட்டை இவங்ககிட்டே ஒப்படைச்சிருக்கோமே, எங்கேயாவது தடுமாறிப் போயிடப் போறாங்களேன்னு கவலை வந்துட்டது..."

"ஏன், நீங்க அப்புறம் கூப்பிட்டுக் கேட்கிறதுதானே?"

"கேட்டேன். டிவேல்யுவேஷன் மேட்டரைப் பப்ளிக்கா டிஸ்கஸ் பண்ண முடியல்லே, ரகசியமாச் செய்ய வேண்டிய காரியம் அது, இது இன்னாங்க. அப்புறம் காங்கிரஸ் காரியக் கமிட்டியிலே இதைப் பத்தி விவாதிச்சோம், என்ன லாபம் ? காரிய கமிட்டியிலே இதைத் திருத்த முடியுமா? கண்டிக்கத் தான் முடியும். கண்டிச்சுத் தீர்மானம் போட்டா கட்சிக்குத் தானே பலக்குறைவு? எங்கே போய்ச் சொல்லிக் கொள்வது? அன்றைக்குத்தான் எனக்குக் கவலை வந்தது. இந்த அம்மாவிடம் நாட்டை விட்டு வைத்தால் ஆபத்துன்னு நினைச்சேன். நான் என்ன செஞ்சுத் தொலைப்பேன்னேன்...!"

சிரிப்பு... பலத்த சிரிப்பு! எக்காளச் சிரிப்பு! தேசம் பாழாய்ப் போகிறதே என்று அடிவயிறு காந்தி வரும் சிரிப்பு... அந்தச் சிரிப்பு அடங்கக் கொஞ்ச நேரம் ஆகிறது.

"பார்ப்பம். பொறுமையாயிருந்துதான் காரியத்தைச் சாதிக்கணும்" மணிக்கட்டைப் பிடித்துக் கொள்கிறார். பிடரியைத் தேய்க்கிறார். தவிக்கிறார்... ! மீண்டும் அந்தக் குழந்தைச் சிரிப்பு.

18