பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

அந்தக் காலத்தில் சத்தியமூர்த்திக்கும், காமராஜிற்கும் ஏற்பட்டிருந்த அன்புக்கும், பிணைப்புக்கும் இணையாக இன்னொரு நட்பைச் சொல்லிவிட முடியாது. காமராஜின் அரசியல் குரு சத்தியமூர்த்தி என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் பொதுவான நிலை அதுவல்ல; காமராஜே சிற்சில சமயங்களில் சத்தியமூர்த்திக்கு ஆசானாக இருந்த துண்டு. சத்தியமூர்த்தி வெள்ளை உள்ளம் படைத்தவர். ஆகையால் யாரையும் எளிதில் நம்பிவிடக் கூடியவர்.அரசியலுக்கே உரித்தான சூழ்ச்சிகள். தந்திரங்கள்,எதுவும் அறியாதவர். அதனால் சத்தியமூர்த்தியை யாருடைய சூழ்ச்சி வலையிலும் சிக்க விடாமல் எச்சரிக்கையோடு இருந்து காப்பாற்றிய பெருமை காமராஜிற்கே உண்டு.அது மட்டுமல்ல,சத்தியமூர்த்தியின் புகழ் அரசியல் உலகில் சுடர் விட்டுப் பிரகாசிப்பதற்கும் காமராஜே காரணமாயிருந்தார்.

காமராஜ் தம்மிடம் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் எந்தக் காலத்திலும் மாறாதவை, மாற்ற முடியாதவை என்பதை அறிந்து கொண்ட சத்தியமூர்த்தி, தம்முடைய அரசியல் வாழ்க்கையில் நெருக்கடி தோன்றிய நேரங்களிலெல்லாம் காமராஜின் ஆலோசனையைக் கேட்டே எதையும் செய்து வந்தார்.

சத்தியமூர்த்திதான் தம்முடைய அரசியல் தலைவர் என்று காமராஜ் சொல்லிக் கொண்ட போதிலும், சத்தியமூர்த்தி தவறு செய்கின்ற போதும், திசை தப்பிப் போகின்ற நேரங்

19