பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தக் காலத்தில் திரு. ஏ.ரங்கசாமி அய்யங்கார், திரு.எஸ். சீனிவாச அய்யங்கார் இவர்களெல்லாம் ரொம்பப் பிரபலமாயிருந்தாங்க. காரணம் திரு. ரங்கசாமி அய்யங்காருக்குச் சொந்தத்தில் பத்திரிகை இருந்தது. அதனால் அவர் பிரபலமடைவது சுலபமாயிருந்தது. திரு. சத்தியமூர்த்திக்கு அத்தகைய வசதி எதுவும் இல்லாததால் அவர்களையெல்லாம் மீறிக் கொண்டு முன்னுக்கு வர முடியல்லே.

முன்னுக்கு வந்த போது அரசியல் தலைமையில் அவருக்கும், ராஜாஜிக்கும் இடையே போட்டி இருந்து கொண்டே இருந்தது. போராட்டம், சிறைவாசம் என்ற போதெல்லாம் சற்றும் தயங்காமல் உற்சாகத்தோடு முன் வந்து நின்ற சத்தியமூர்த்தி,பதவி என்று வரும் போது மட்டும் அதைத் தாமே அடைய வேண்டும் என்று எண்ணாமல் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராயிருந்தார்.

திரு. சத்தியமூர்த்திக்குப் பதவி மீது ஆசையில்லை என்பது இதற்கு அர்த்தமில்லை. அவருக்கு விருப்பம் இருந்தும், தகுதி இருந்தும், சந்தர்ப்பங்கள் இருந்தும் அவ்வப்போது ஏற்பட்ட போட்டி காரணமாக அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவிகள் கிடைக்காமற் போய் விட்டன.காங்கிரஸ் காரியக் கமிட்டியில் அங்கம் வகிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதுண்டு. ஆனால் இது கிடைக்காமலே போய் விட்டது.மந்திரி சபையில் இடம் பெற வேண்டுமென்ற அவருடைய விருப்பமும் நிறைவேறாமல் போய் விட்டது.

1937-இல் நடைபெற்ற சென்னை அசெம்பிளி தேர்தலில் காங்கிரஸ்காரர்களே எதிர்பார்க்காத அளவுக்கு காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது. இதற்குக் காரணம் சத்தியமூர்த்தி ஒய்வு ஒழிவில்லாமல், இராப் பகலாகக் காரிலேயே சுற்றுப்பயணம் செய்து, ஊர் ஊராகப் பிரசாரம் செய்ததுதான்.அவருடைய பிரசாரந்தான் காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணம்னு சொல்லணும்.அந்தச் சமயம் ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகியிருந்தார்.

ராஜாஜி முதல் மந்திரியாக வர்வேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை. ராஜாஜி முதல் மந்திரியாக வர

22