பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெளியில் சென்றவுடன் மதுரையில் அரசியல் மகாநாடும், மாகாண காங்கிரஸ் கமிட்டித் தேர்தலும் நடைபெற்றன. திரு. சத்தியமூர்த்தியிடம் எங்கள் முடிவைத் தெரிவித்த போது அவர் சரி என்று ஒப்புக் கொண்டார். ஆனால் தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு அரை மணி முன்னதாக ராஜாஜியும் போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும் சத்தியமூர்த்தி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.அகில இந்திய சூழ்நிலையில் அது தவறான கருத்தை உண்டாக்கும் என்று சத்தியமூர்த்தி கருதியதே அதற்குக் காரணம். சத்தியமூர்த்தி அப்போது தலைமைப் பதவியை ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தது மட்டுமின்றி, ராஜாஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தாமே உபதலைவராக இருந்து வேலை செய்யவும் ஒப்புக் கொண்டார்.

1936-இல் பொதுத் தேர்தல் வந்த போது,தேர்தல் பிரசாரத்துக்காகச் சத்தியமூர்த்தி அவர்களும், நானும் திருவண்ணாமலைப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தோம்.அதே சமயம் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது.திரு.குமாரசாமி ராஜா தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டதைக் காங்கிரஸ் கட்சியில் பெருவாரியானவர்கள் விரும்பாததால் அவருக்கு எதிராக இன்னொருவரை நிறுத்த ஏற்பாடு செய்தனர். இந்த பிரச்னையைத் தீர்த்து வைக்க உடனே மதுரைக்குப் புறப்பட்டு வரும்படி தலைவர் சத்தியமூர்த்திக்குத் தந்தி கொடுத்திருந்தனர்.அதைக் கண்ட சத்தியமூர்த்தி என்னைப் பார்த்து,'குமாரசாமி ராஜாதான் விட்டுக் கொடுக்கட்டுமே!அவர் போட்டியிடவில்லையென்றால் பிரச்னை தீர்ந்து விடும் அல்லவா? நீ என்ன சொல்கிறாய் ராஜாவுக்குத் தந்தி கொடுத்து, ஒதுங்கிக் கொள்ளச் சொல்லலாமா?' என்று கேட்டார்.

அப்போதிருந்த நிலைமையில் குமாரசாமி ராஜா தலைவராயிருப்பதுதான் நல்லது என்று எனக்குத் தோன்றியது. ஆகையால் 'நாம் இருவரும் மதுரைக்குச் சென்று ராஜாவையே மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்யலாம் என்று யோசனை கூறினேன்.ஆனாலும் அது அவ்வளவு

24