பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4

திரு. சத்தியமூர்த்தி 1936-இல் மாகாணக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராயிருந்த போது அவருடைய காரியதரிசியாகப் பணியாற்றினார். நேருஜி தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது சத்தியமூர்த்தி, காமராஜ் இருவருமே அந்தச் சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டனர். காமராஜின் கடின உழைப்பையும், தன்னலமற்ற சேவையையும் நேருஜி நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டது அப்போது தான்.

அதற்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக வரும் வாய்ப்பு சத்தியமூர்த்திக்கு இல்லாமலே போய்விட்டது. சத்தியமூர்த்தி தலைவராக வருவதற்கு ராஜாஜியே பக்கபலமாக இருந்துங்கூட, சத்தியமூர்த்தியால் வெற்றி பெற முடியவில்லை. காங்கிரசுக்குள் வகுப்பு வாதம் புகுந்து விட்டதே இதற்குக் காரணம். சத்தியமூர்த்தி இதை நன்றாகப் புரிந்து கொண்டதால் தலைவர் தேர்தலுக்குத் தாம் போட்டியிடு வதை நிறுத்திக் கொண்டு, 1940-இல் காமராஜைப் போட்டியிடச் செய்தார்.

அந்தக் காலத்தில் காங்கிரசுக்குள் ராஜாஜி கோஷ்டி, சத்தியமூர்த்தி கோஷ்டி என்று இரண்டு பிரிவுகள் இருந்தன. காமராஜை நிறுத்தி வைத்திருப்பது பற்றி ராஜாஜியின் கருத்தை அறிந்து கொள்வதற்காக முத்துரங்க முதலியார். அவிநாசிலிங்கம், ராமசாமி ரெட்டியார் மூவரும் ராஜாஜியை நேரில் போய்ப் பார்த்துப் பேசினார்கள். அவர்களிடம்

27