பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொண்டால் தங்கள் அரசியல் வாழ்க்கை என்ன ஆவது?” என்று கேட்டார் காமராஜ்.

இதற்குப் பிறகுதான் சத்தியமூர்த்தி அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டார்.

காமராஜிடம் இதைப் பற்றி நான் விசாரித்தபோது அவருக்கு இந்தப் பழைய சம்பவங்களெல்லாம் நினைவில் தோன்றி மறைந்திருக்க வேண்டும். சத்தியமூர்த்தியை நினைத்துக் கொண்டு ஒரு முறை பலமாக சிரித்தார் அவர். “ஐயோ பாவம், சத்தியமூர்த்தி குழந்தை மாதிரி அவருக்கு ஒண்னும் தெரியாது. சின்னச் சின்ன பதவி என்றால்கூட அதை விடுவதற்கு மனம் வராது அவருக்கு. அதுக்கெல்லாம் ஆசைப்படுவார். எப்பவுமே நான் சொல்வேன். பதவின்னு வரப்போ அதுமேல் ஆசைப்படாமல் இருந்தாத்தான் தப்பு செய்ய மாட்டோம். பதவி ஆசை வந்தா, அது அறிவைக் கெடுத்துடும்பேன்” என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தார்.

32