பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

"நீங்கள் 1940இல் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவரான பிறகுதானே தனிப்பட்டவர்கள் சத்தியாக்கிரகம் ஆரம்பமாயிற்று? அப்போது எந்த இடத்தில் சத்தியாக்கிரகம் செய்தீர்கள்? எப்போது கைது செய்யப்பட்டீர்கள்?" என்று காமராஜைக் கேட்டேன்.

"நான் சத்தியாக்கிரகம் செய்யவில்லை. அதற்குள்ளாகவே போலீசார் என்னைப் பாதுகாப்புக் கைதியாகக் கைது செய்து சிறைக்குக் கொண்டு போய்விட்டார்கள்... காந்திஜியின் அனுமதி பெற்றவர்களே சத்தியாக்கிரகம் செய்யலாம் என்பது நிபந்தனை. எனவே, தமிழ்நாட்டில் சத்தியாக்கிரகம் செய்ய விரும்புகிறவர்களின் ‘லிஸ்ட்’ ஒன்றைத் தயாரித்து எடுத்துக் கொண்டு நான் காந்திஜியை நேரில் கண்டு பேசுவதற்காகச் சேவாகிராமம் போய்க் கொண்டிருந்தேன்.என்னுடன் நாகராஜனும் வந்து கொண்டிருந்தார்...”

"எந்த நாகராஜன்? அந்தக் காலத்தில் நாகராஜன் என்பவர்தான் தங்களுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தார் என்றும், அவர் சொல்படிதான் நீங்கள் கேட்பீர்கள் என்றும், சொல்வார்களே, அந்த நாகராஜனா? "

"அதெல்லாம் சும்மாப் பேச்சு என்னோடு அவர் எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பார். அவரை முதல் முதல் 'இந்தியா’ பத்திரிகை ஆபீசிலோ, அல்லது வேறு எங்கேயோ சந்தித்தேன்.அவருக்கு என்னிடத்தில் அக்கறையும் அன்பும் இருப்பதை அறிந்து கொண்டேன். அதனால் நானும் அவரும்

33