பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“நல்ல எழுத்தாளர். அந்தக் காலத்திலே திரு.வி. கலியாண சுந்தர முதலியார் ‘நவசக்தி’ன்னு ஒரு பேப்பர் நடத்திக்கிட்டிருந்தார். அதிலேதான் கிருஷ்ணமூர்த்தி எழுத்தை நான் முதல்லே படிச்சேன். தேனீயோ, தமிழ்த் தேனீயோ — ஏதோ ஒரு பேர்லே எழுதுவார். ரொம்பத் தெளிவா, வேடிக்கையா எழுதுவாக. ஆனந்த விகடனில் அவர் எழுதிய தலையங்கமெல்லாம் காங்கிரசுக்குப் பெரிய பலம் தேடிக் கொடுத்தது. ஏ.என்.சிவராமன் கூட என்னோடு ஜெயில்லே இருந்தவர்தான். 1930இல் அலிபுரம் ஜெயில்லே நான், சிவராமன், சடகோபன், கிருஷ்ணசாமி, வெங்கட்ராமன் எல்லாரும் ஒரு பக்கம்; லாகூர் வழக்கிலே ஈடுபட்டவங்க இன்னொரு பக்கம். சிவராமன் பெரிய பெரிய சிக்கலான பிரச்னைகளையெல்லாம் எடுத்து அலசி ஆராய்ந்து கோர்வையா எழுதுவார். பாமரர்களை விடப் படிச்சவங்க. அவர் தலையங்கத்தை ரொம்ப விரும்பிப் படிப்பாங்க. சொக்கலிங்கமும் கல்கியும் பாமரர்களுக்கும். புரியும்படி எழுதுவாங்க.”

“பின்னால் ராஜாஜி வேண்டுமா வேண்டாமா?’ன்னு தமிழ் நாட்டிலே ஒரு பெரிய கிளர்ச்சி நடந்ததே; அப்ப கல்கி தங்களை ரொம்பத் தாக்கி எழுதினாரே, அதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?”

“அவருக்கு என் பேரில் உள்ள கோபத்தினாலே அப்படி எழுதினாருங்கிறதை விட ராஜாஜியின் பேரில் உள்ள பக்தியினால் எழுதினருங்கறதுதான் என் அபிப்பிராயம். எப்படி எழுதினாலும் ரொம்பத் தெளிவான எழுத்து. காங்கிரஸை வளர்க்கிறதுக்கு அவரும் வாசனும் ரொம்ப உதவி செஞ்சிருக்காங்க.”

இப்போ சத்தியமூர்த்தி பவன் இருக்குமிடத்தில்தான் அப்ப காங்கிரஸ் ஆபீஸ் இருந்தது. அது முப்பது வருஷத்துக்கு முன்னாலே தீப்பிடிச்சு எரிஞ்சு போச்சு. அப்ப. காங்கிரஸ் கட்டட நிதிக்குப் பணம் வசூல் செய்ய ஆரம்பிச்சதும் முதல் முதல் வாசன்தான் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார். மொத்தம் அறுபது எழுபதாயிரம் ரூபாய் சேர்த்து வெச்சிருந்தேன். தேனாம்பேட்டையிலே இப்ப இருக்கிற காங்கிரஸ் கிரவுண்ட்

35