பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

ஆகஸ்ட் போராட்டத்துக்கு முன் இந்தியாவுக்கு வந்த சிரிப்ஸ் மிஷன் இந்தியத் தலைவர்களுடன் பேசி ஓர் உடன்பாட்டுக்கு வர எண்ணினார்கள். அந்தத் தூது கோஷ்டியின் முயற்சி வெற்றி பெறாததால், அவர்கள் தோல்வியுடன் திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று. இந்த நேரத்தில்தான் ராஜாஜி முஸ்லிம் லீகின் பாகிஸ்தான் கோரிக்கையை ஒப்புக் கொள்ளலாம் என்றும், அவர்களையும் சேர்த்துக் கொண்டு தேசிய சர்க்கார் அமைக்கலாம் என்றும் ஒரு யோசனையை வெளியிட்டார். இந்த யோசனையைக் காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்றுக் கொள்ள மறுத்தது. இதனால் ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகித் தனி மனிதராக நின்று தம்முடைய பாகிஸ்தான் பிரசாரத்தைத் தொடங்கினார்.

இதற்குப் பிறகுதான் பம்பாயில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி அடுத்தாற்போல் காங்கிரசின் போராட்டம் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி ஆலோசித்தது. இந்தச் சரித்திரப் புகழ் வாய்ந்த கூட்டத்துக்கு நாட்டின் எல்லாத் திசைகளிலிருந்தும் காங்கிரஸ் தலைவர்களும், பிரமுகர்களும், தொண்டர்களும் போயிருந்தார்கள்.

ஆகஸ்ட் எட்டாம் தேதியன்று பம்பாய் நகரமே அல்லோலகல்லோலப்பட்டது. காந்திஜி, சர்தார் படேல், நேருஜி போன்ற பெருந்தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்து தலைவர் சத்திய-

38