பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“சரி, நீங்க போங்க, நான் தமிழ் நாட்டுக்கே போயிடறேன்னு சஞ்சீவ ரெட்டி கிட்டே சொல்லிட்டு, அரக்கோணம் வரை வந்துட்டேன். அரக்கோணத்திலே எட்டிப் பார்த்தா, பிளாட்பாரம் பூரா ஒரே போலீலாயிருந்தது. வந்தது வரட்டும்னு தைரியமா பிளாட்பாரத்தில் இறங்கி நடந்தேன். நல்லவேளையா என்னை யாரும் கைது செய்பல்லே. அவங்க லிஸ்ட்லே என்பேரு இருந்ததா, இல்லையான்னும் தெரியல்லே. மளமளன்னு ஸ்டேஷனுக்கு வெளியே போய் ஒரு வண்டியைப் பிடிச்சு, சோளங்கிபுரம் போயிட்டேன்.”

“அங்கே எதுக்குப் போனீங்க?”

“அங்கே ஓட்டல் தேவராஜய்யங்கார்னு ஒரு காங்கிரஸ்காரர் இருந்தார். பழைய காங்கிரஸ்காரர். அவருக்கு இரண்டு பிள்ளைங்க. ஒருத்தர் ஏதோ சினிமா தியேட்டரோ, கம்பெனியோ நடத்திக்கிட்டிருக்கார்னு கேள்வி.”

தேவராஜய்யங்கார் ஓட்டல்லே சாப்பிட்டுவிட்டு கார் மூலமா அன்றைக்கே ராணிப்பேட்டை போயிட்டேன். ராத்திரி பத்து மணி இருக்கும். கலியாணராமய்யர் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினேன். அவர் கதவைத் திறக்கல்லே. அவருக்குப் பயம், போலீஸார் தன்னைக் கைது செய்ய வந்திருப்பாங்களோன்னு. என் குரலைக் கேட்டப்புறம் தான் மெதுவாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். அந்த நேரத்தில் என்னைக் கண்டதும் அவருக்கு ஆச்சரியமாய்ப் போய் விட்டது.

சரி, நீங்க இங்கே தங்கினால் ஆபத்து. போலீஸார் கண்டு பிடித்து விடுவார்கள், வாங்க இன்னொரு இடம் இருக்கு’ன்னு சொல்லி ராணிப்பேட்டைக்கு வெளியே ஒரு மைல் தள்ளி ஒரு காலி வீட்டுக்கு அழைச்கிட்டுப் போனார். அது ஒரு முஸ்லிம் நண்பருக்குச் சொந்தம்.

அந்த வீட்டிலேயே ராத்திரி படுத்துத் தூங்கினேன். மறுநாள் பகல்லே கலியாணராமய்யரிடம் பேசிக்கிட்டிருக்கிறப்போ கொஞ்ச தூரத்தில் யாரோ ஒரு சப் இன்ஸ்பெக்டர் வர்ற மாதிரி தெரிஞ்சுது.

சப் இன்ஸ்பெக்ட்ரைக் கண்டதும் கலியாணராமய்யருக்கு மறுபடியும் பயம் வந்துட்டுது.

40