பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"வண்டியிலே எதுக்குப் போனிங்க?" "விருதுநகரிலே எங்க வீட்டுக்குப் போற வழியிலேதான் போலீஸ் ஸ்டேஷன் இருக்குது. அந்தத் தெரு வழியா நடந்து போளு போலீஸார் பார்த்துட மாட்டாங்களா? அதனாலே வண்டியிலே போனேன்.”

"அம்மாவைப் பார்த்தீங்களா?” "ஆமாம்; ராத்திரி விட்டிலேதான் இருந்தேன். அதுக்குள்ளே போலீசுக்கு எப்படியோ தகவல் எட்டிவிட்டது. சரி. இனி மெட்ராஸ் போக முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. அதனாலே 'நான் வீட்டிலேதான் இருக்கேன். அரெஸ்ட் செய்யறதாயிருந்தால் செய்துக்கலாம்னு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சொல்லி அனுப்பிட்டேன்."

"எழுத்தச்சன்னு ஒரு சப் இன்ஸ்பெக்டர்தான் உங்களை அரெஸ்ட்செய்தார் இல்லையா?"

"ஆமாம், அவர்கூடச் சொன்னார், 'வேணும்னா நீங்க இன்னும் சில நாள்கூட வெளியே இருக்கலாம். போலீஸ் உங்களைத் தேடிக்கிட்டு அரியலூர் போயிருக்குதுன்னு. நான் தான் என் வேலையெல்லாம் முடிஞ்சுட்டுது. இனிமேல் வெளியே இருந்து ஒண்ணும் செய்ய முடியாது. உள்ளே, போவதுதான் சரின்னு சொல்லிட்டேன். அப்புறம் என்ன அரெஸ்ட் பண்ணிக்கிட்டுப் போயிட்டாங்க."

"ஜெயில்லேருந்து எப்ப வெளியே வந்திங்க" "மூணு வருஷம் கழிச்சு 1945 ஜூலயில் வந்தேன்." "அதுவரைக்கும் நீங்கதான் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் பிரஸிடெண்டா?"

"ஆமாம். எல்லாருமே ஜெயிலுக்குப் போயிட்டாங்க. காங்கிரஸுக்குச் சர்க்கார்லே வேறே தடை போட்டிருந்தாங்க, ராஜாஜி காங்கிரளிலிருந்து விலகிப் பாகிஸ்தான் பிரசாரம் செய்துக்கிட்டிருந்தார். இதனாலே அவர் பேரில் காங்கிரஸ் காரர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு, ராஜாஜி எதிர்ப்புக் கோஷ்டின்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே பலமா வளர்ந்து விட்டது. "

"காத்திஜீ தமிழ்நாட்டிலே சுற்றுப் பயணம் செய்துட்டுப்

42