பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போறப்போ ராஜாஜிக்கு எதிரா இருந்தவங்களைக் ‘கிளிக்’ என்று சொன்னாரே, அது அப்பத்தானே?"

ஆமாம்; ஹரிஜன் பத்திரிகையிலே அப்படி எழுதினார். நான் அதை ஆட்சேபித்து அறிக்கை விட்டேன். காந்திஜி அப்படிச் சொன்னது தப்புன்னு சர்வோதயம் ஜகந்நாதன் மதுரைக் கோயில்லே போய் உட்கார்ந்துகிட்டு உண்ணாவிரதம் இருந்தார்.

காந்திஜி சொல்லிட்டாரே. அதை எப்படிக் கண்டிக்கிறதுன்னு நான் பயப்படல்லே. இதே மாதிரி படேலுடன் கூட் ஒரு சமயம் சண்டை போட்டிருக்கேன். 1945-இல் மத்திய அசெம்பிளிக்கு யார் யாரைப் போடணும் என்பதில் எனக்கும் படேலுக்கும் தகராறு வந்தது. மைனாரிட்டி வகுப்பிலேருந்து யாராவது ஒருத்தரைப் போடலாம்னு நான் சொன்னேன். தூத்துக்குடி பால் அப்பாசாமிங்கிறவரைப் போடலாம். கிறிஸ்துவராயும். இருக்கிறார். படிச்சவராயும் இருக்கார்னு சொன்னேன்.

அவருக்கு வயசாயிட்டுதுன்னு சொல்லி மறுத்துட்டார் படேல். அவருக்குப் பதிலா மாசிலாமணி என்பவரை ஏன் போடக்கூடாதுன்னு என்னைக் கேட்டார்.

அவருக்கு உடல்நலம் சரியில்லை. அவர் வேண்டாம்னு நான் சொன்னேன்.

என்ன உடம்புன்னு என்னக் கேட்டார். அவருக்கு ‘லெப்ரஸி’ இருக்குதுன்னு சொன்னேன். படேல் நம்பல்லே; நான் பிடிவாதமாயிருந்தேன். நான் சொல்றதிலே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மெடிக்கல் ரிப்போர்ட் மூலமா செக் பண்ணிக்கலாம்’னு சொன்னேன். அப்புறம் தான் மாசிலாமணி பேர் அடிப்பட்டுப் போச்சு. அம்மு சுவாமிநாதனை போட்டாங்க. என்னைப் படேல் நேரில் வரச் சொல்லிப் போன் பண்ணினார். நான் அப்ப பம்பாயில்தான் இருந்தேன். லிஸ்ட்டை முடிவு செய்யுங்க, அதுக்கப்புறம் நான் வந்து சந்திக்கிறேன்’னு சொல்லி விட்டேன்."

43