பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

ஆகஸ்ட் இயக்கத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடைபெற்ற பெரிய தேர்தல் 1946 இல் தான். இந்தத் தேர்தலில் காங் கிரசுக்கு எல்லா மாகாணங்களிலும் மாபெரும் வெற்றி கிட்டியது. அப்போது நம்முடன் கேரளாவும், ஆந்திராவும் சேர்ந்திருந்தன. -

அந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காம ராஜ் சாத்துரர் - அருப்புக் கோட்டைத் தொகுதியில் போட்டி யின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்கு மொத் தம் 165 சீட்டுக்கள் கிடைத்திருந்ததால் மந்திரி சபை அமைக்கக் கூடிய ஒரே மெஜாரிட்டி கட்சி அதுவாகத்தான் இருந்தது. - அடுத்தாற்போல் யாரைச் சட்டசபைக் கட்சித்தலைவராகத் தேர்ந்தெடுப்பது, யாரை முதலமைச்சராக்குவது என்ற பிரச்னை காங்கிரஸ் மேலிடத்தில் எழுந்தது. அப்போது அபுல்கலாம் ஆஸாத் காங்கிரஸ் தலைவராயிருந்தார். வல்லபாய் படேல் மத்தியப் பார்லிமெண்டரி போர்ட் சேர்மஞக இருந்தார்.

மற்ற மாநிலங்களிலெல்லாம் யார் முதன் மந்திரி என்ற பிரச்னைக்கே இடமில்லாமல் போய்விட்டது. காரணம், 1937ஆம் ஆண்டில் யார் முதலமைச்சராயிருந்தார்களோ அவர்களே 1946லும் முதல் மந்திரியாக வந்தார்கள். - உ.பி.யில் பந்த்தும், பம்பாயில் பி.ஜி. கேரும், மத்தியப் பிரதேசத்தில் சுக்லாவும், பீகாரில் கிருஷ்ண சின்ஹாவும் பழைய படியே முதலமைச்சர்களாஞர்கள். சென்னை மாகாணத் தில் மட்டும் பழைய முதன் மந்திரியான ராஜாஜி முதல் மந்திரி

50 -

50