பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாக வர முடியவில்லை. துரதிருஷ்டவசமாக அச்சமயம் ராஜாஜி காங்கிரசிலிருந்தே விலகியிருந்தபடியால் யாரை முதல் மந்திரியாகப் போடுவது என்ற பிரச்னை மேலிடத்துக்கு ஏற்பட்டது.

காந்திஜி, ஆஸாத் போன்ற தலைவர்கள் ராஜாஜியே முதல் மந்திரியாக வர வேண்டும் என்றும் அவருடைய சேவையைச் சென்னை மாகாணம் இழந்து விடக்கூடாது என்றும் விரும்பினார்கள். காரியக் கமிட்டியிலும் அம்மாதிரி ஒரு தீர்மானத்தைப் போட்டு, சென்னைச் சட்டசபைக் கட்சிக்கு அனுப்பி வைத்தார்கள். காங்கிரஸ் தலைவர் அபுல்காம் ஆஸாதும், காந்திஜியும், காங்கிரஸ் மேலிடமும் ராஜாஜி முதல் மந்திரியாக வருவதை விரும்பிய போதிலும், சென்னைச் சட்டசபை காங்கிரஸ் கட்சி அவர்கள் விருப்பத்தை ஏற்க வில்லை.

"அப்படியானால் சட்டசபைக் கட்சித் தலைமைக்கு யாரைப் போடலாம் என்பதற்கு பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். தாங்கள் அந்தப் பட்டியலிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்துச் சொல்கிறாம்" என்று மேலிடம் கூறியது.அதற்கும் சென்னைச் சட்டசபைக் கட்சி ஒப்புக் கொள்ளவில்லை.

இதற்கிடையில் ஆந்திரக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பிரகாசம், கேரள காங்கிரஸ் கமிட்டித்தலைவர் மாதவமேனன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராஜ் மூவரும் டில்லிக்குப் புறப்பட்டுச் சென்று காந்திஜி, படேல், ஆலாத் மூவரையும் சந்தித்துப் பேசினார்கள். பட்டாபி சீதாராமய்யா, ராஜாஜி, காளா வெங்கடராவ், கோபால ரெட்டி போன்ற தலவர்களும் அப்போது டில்லியில் இருந்தார்கள்.

காந்திஜி, ஆஸாத் படேல் மூவருமே ராஜாஜிதான் முதல் மந்திரியாக வர வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அவர்கள் காமராஜை அழைத்துப் பேசும்போது, "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டனர்.

"எங்களுக்குள் இப்போது எந்தவித வேற்றுமையுமில்லை. ஆந்திரா. தமிழ்நாடு பேதமுமில்லை. ஆகையால் நமக்குள்

51