பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரைச் சொல்லி வற்புறுத்துகிறீர்களே! நீங்களேதான் சொல்லுங்களேன்!” என்று கடிந்து கொண்டார் காமராஜ்.

இதற்குள், 'நீங்கள் ராஜாஜியை ஆதரித்தால் உங்களுக்கு மந்திரிப் பதவி கிடைக்கும்' -- என்று யாரோ பிரகாசத்திடம் சொல்லியிருக்கிருர்கள். பிரகாசத்துக்கு மந்திரிப் பதவியின் மேல் ஆசை. அதனல், "சரி, ராஜாஜியை ஆதரிக்கிறேன்” என்று டில்லியில் கூறிவிட்டுச் சென்னை வருவதற்குள் அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டார். பிரச்னை இவ்வாறு குழம்பி போகவே, 'உங்கள் இஷ்டப்படி செய்து கொள்ளுங்கள்' என்று மேலிடத்தார் சும்மா இருந்து விட்டார்கள். - - X- .

சென்னைக்கு வந்ததும் பிரகாசம் சட்டசபைக் கட்சித் தலைமைக்குத் தாம் போட்டியிடப் போவதாகக் கூறிஞர். காத்திஜி சொன்ன பிறகு பிரகாசத்தை ஆதரிக்கக் காமராஜின் மனம் இடம் தரவில்லை. எனவே பிரகாசத்துக்குப் போட்டியாக முத்துரங்க முதலியாரைக் கட்சித் தலைமைக்குப் போட்டியிடச் செய்தார். இந்த போட்டியில் ராஜாஜி கோஷ்டியினர் நடுநிலைமை வகித்தனர். இதல்ை பிரகாசமே வெற்றி பெறும் படியாயிற்று.

காமராஜுக்கு இதில் வருத்தமோ, அதிருப்தியோ கிடை யாது. "பிரகாசத்தோடு ஒத்துழைக்க வேண்டாம்" என்று காமராஜரிடம் சிலர் யோசனை கூறிஞர்கள்.

"சட்ட ரீதியாகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகு பிரகாசத்தோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பது முறையல்ல" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் காமராஜ். ஆயினும் பிரகாசம் மட்டும் காமராஜ். பேச்சைக் கேட்காம லேயே காரியங்களைச் செய்து கொண்டிருந்தார். மந்திரி சபையில் மாதவ மேனனைச் சேர்த்துக் கொள்ளுமாறு காமர்ாஜ் பிரகாசத்திடம் கூறிஞர். ஆளுல் பிரகாசம் அப்படிச் செய்யா மல் ராகவ மேனனைப் போட்டுக் கொண்டார். காமராஜ் நினைத்திருந்தால் தாமே அப்போது மந்திரியாகி இருக்க முடியும். பதவிக்கு அவர் ஆசைப்படவில்லை. பதவி ஆசை இல்லாதவர் யாருக்கும், எதற்கும் பயப்பட வேண்டிய அவசிய

53

53