பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்லை அல்லவா? மனத்தில் நியாயம் என்று பட்டதை யாரிடமும் அஞ்சாமல் எடுத்துச் சொல்லலாமல்லவா? அந்த உறுதி காமராஜுக்கு மட்டுமே இருந்தது.

இதற்குப் பிறகு கொஞ்ச காலத்துக்குள்ளாகவே பிரகாசம் மத் திரி சபை ஆட்டம் கண்டு விட்டது. அவரைப் பிடிக்காத சிலருக்கு எதிராகக் கையெழுத்துக்கள் சேகரித்து அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தார்கள். காமராஜ க்கு இதில் இஷ்டமில்லை. 'இன்னும் சில நாட்களில் சட்டசபைக் கட்சித் தலமைக்குத் தேர்தல் நடக்கப் போகிறது. அப்போது வேண்டுமானல் பிரகாசத்தை நீக்கிவிட்டு வேறு தலைவரைப் போட்டுக் கொள்ளலாம். அதற்குள் நம்பிக்கை வில்லாத் தீர்மானம் எதற்கு” என்பது காமராஜின் எண்ண்ம்.

அப்போது டில்லியில் அரசியல் நிர்ணயச் சபைக் கூட்டம் தடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழ்நாடு, கேரளம், ஆத் திரம், கர்நாடகம் ஆகிய நாலு இடங்களுக்குமாகச் சேர்ந்து சுமார் நாற்பத்தெட்டு அங்கத்தினர்கள் அ.தி. சபையில் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒரு நாள் இடைக்காலச் சர்க்காரில் மத்திரியாக் இருந்த ராஜாஜியின் வீட்டில் கூடி ஒரு தீர்மானம் போட்டார்கள்.

“வரும் சட்டசபையில் கட்சித் தலைமைத் தேர்தலின் போது பிரகாசத்தை நீக்கிவிட்டு ஓமந்துக் ராமசாமி ரெட்டியாரை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுப்பது வரப்போகும் புதிய தலவர். தேவைப்பட்டால் தகுதி உள்ள ஒருவரை முதலமைச். சராக நியமிப்பது" என்பதே அந்தத் தீர்மானம், இப்படி ஒரு தீர்மானத்த்ை எழுதி, அங்கு வந்திருத்தவர்கள் எல்லாரும் கையெழுத்துப் ப்ோட்டுக் கொடுத்தார்கள்.

ஆளுலும் பிரகாசம் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்பதில் சிலர் திவிரமாக இருந்ததால் அவர்களுடைய விருப்படியே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதென்று முடிவாயிற்று. இதற்கிடையில். "கொஞ்சம் பொறுங்கள். நான் வந்து சமரசம் செய்து வைக் கிறேன்" என்று சொல்லிக் கொண்டு ஆசாரிய கிருபளானி

சென்னைக்குப் பறந்து வந்தார்.

54.

54