பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிலைமை முற்றிப்போகவே, “நான் முதன் மந்திரியாக இருந்தால் போதும்; என் மந்திரி சபையில் யாரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்” என்று பிரகாசம் கூறினார். காமராஜரிடம் வந்து, “நீங்கள் யாரைச் சொல்கிறீர்களோ அவர்களை மந்திரி சபையில் சேர்த்துக் கொள்கிறேன்” என்றார்.

“இப்போது அதுவல்ல பிரச்னை. உங்களை நீக்கிவிட்டு வேருெருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று கூடியிருக்கிறோம். இந்தச் சமயத்தில் எங்களுக்கு வேண்டிய ஆட்களை மந்திரி சபையில் போடுவதாகப் பேரம் பேசுகிறீர்களே, முதலில் நீங்கள் வெளியேறுங்கள். அப்புறந்தான் மற்றச் சங்கதி!” என்றார் காமராஜ்.

இப்படித் துணிந்து சொல்லும் தைரியம் அப்போது காமராஜுக்கு மட்டுமே இருந்தது. காரணம், அவர் எப்போதும் எந்தப் பதவிக்கும் ஆசைப்படாமல் இருந்ததுதான்.

55