பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்கடுத்தாற்போல் தேர்தல் நடந்தபோது ஓமந்து ரெட்டி யாருக்கு எதிராக டாக்டர் சுப்பராயனை நிறுத்தி வைத்தார்கள். இதற்குள் ஒமந்துார் ரெட்டியார் ஆட்சி மீது சில காங்கிரஸ் காரர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருந்தது. காரணம், ரெட்டி யார் ரொம்பக் கண்டிப்புக்காரர். காங்கிரஸ்காரர்கள் யாரும் அவரிடம் போய் எவ்விதச் சலுகையும் பெற்றுவிட முடியாது. எனவே, ரெட்டியார் மீது சில காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம் இருந்ததில் என்ன வியப்பு? . *

தலைவர் தேர்தலில் தோற்றுப் போன பிரகாசம் கோஷ்டியும் ராஜாஜி கோஷ்டியும் ஒன்று சேர்ந்து டாக்டர் சுப்பராயனத் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருந்தது. எனவே, சலுகை பெற முடியாத காங்கிரஸ் காரர்களின் எதிர்ப்போடு இவர்களுடைய எதிர்ப்பு சேர்ந்துக் கொள்ளவே ஒமந்துார் ரெட்டியார் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. " .

ரெட்டியாரிடம் சிலர் இதை எடுத்துச் சொன்னபோது, “ரொம்ப சரி, நான் தலைவர் தேர்தலிலிருந்து விலகிக் கொள்ளத் தயார். அப்படியாளுல் எனக்குப் பதில் யாரைப் போடப் போகிறீர்கள்?' என்று கேட்டார். . . . . . .

'பக்தவத்சலத்தைப் போடலாம்' என்று சிலர் சொன் ஞர்கள். -

'பக்தவத்சலம் வேண்டாம், அவருக்குப் பதிலாகக் குமாரசாமி ராஜாவைப் போடுவதாயிருந்தால் நான் விலகிக் கொள்கிறேன்' என்ருர் ரெட்டியார். -

காமராஜுக்கு இதில் எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை. பக்தவத்சலந்தான் வர வேண்டும் என்ற கட்டாயமும் அவருக்கு

குமாரசாமி ராஜாவுக்கு அப்போது உடல்நிலை சரியில்லாத ததால் ஜெனரல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண் டிருந்தார். அவரிடம் போய் இதைப் பற்றிச் சொன்னபோது, அவர் வியப்பில் ஆழ்ந்து போளுர், . . . - -

ஓமந்துார் ரெட்டியாரிடம் சலுகை பெற முடியாத' காங்கிரஸ்காரர்கள் காமராஜிடம் போய் ரெட்டியாரைப்

57

57