பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றிப் பலவாறு புகார் செய்தபோதும் அவர் வாயை திறக்க வில்லை. பிரகாசம் தம் பேச்சைக் கேட்கவில்லை என்பதற்காகவும் காமராஜ் கோபப்படவில்லை. -

பக்தவத்சலத்தைக் கட்சித் தலைவர் தேர்தலுக்கு நிறுத்தப் போவதாகச் சொன்னபோது ராமசாமி ரெட்டியார், "அவர் வேண்டாம், குமாரசாமி ராஜாவைப் போடுங்கள்' என்று சொன்னதையும் காமராஜ் ஆட்சேபிக்கவில்லை. முதலில் பக்தவத்சலத்தைத் தலைவராக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தபோதிலும் கடைசி நிமிடத்தில் அதை மாற்றிக் கொண்டு குமாரசாமி ராஜாவுக்காக வேலை செய்து ராஜாவை வெற்றி பெறச் செய்தார்.

இதெல்லாம் எதைக் காட்டுகிறது: காமராஜுக்குச் சொந்த முறையில் யாரிடமும் விருப்பு வெறுப்புக் கிடையாது என்பதைத்தானே! x -

1949-ல் அமைந்த குமாரசாமி ராஜா மந்திரி சபை 1952-இல் பொதுத் தேர்தல் நடந்து முடியும்வரை நீடித்தது.

சென்னையில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமை நிலவுவதிலும் காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதிலும் காமராஜுக்கு எவ்வளவு அக்கறை இருந்ததோ அந்த அளவுக்கு மத்தியில் நேரு ஆட்சிக்கும் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கும் சுமுகமான உறவு இருக்க வேண்டுமென்பதில் இருந்தது. -

அகில இந்தியக் காங்கிரஸ் விவகாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு காமராஜுக்கு முதன்முதல் 1931-இல் கிடைத்தது. அந்தத் தொடர்பு இன்றுவரை நீடித்திருக்கிறது. அது மட்டுமல்ல; காங்கிரஸ் மேலிடத்திலும், காந்திஜி, நேரு, படேல், ஆஸாத் போன்ற பெருந் தலைவர்களிடத்திலும் காம ராஜின் செல்வாக்கு அபரிமிதமாகப் பெருகியது. ‘. . . .

அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்குத் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகச் செல்லும் பெருமை அதற்குமுன் திரு. எஸ். சீனிவாசய்யங்கார், ராஜாஜி ஆகியோருக்கு மட்டுமே இருந்தது. அவர்கள் இருவருக்குப் பிறகு அந்தப் பெருமையை அடைந்தவர் காமராஜ்தான். நேருவின் தலைமையிலும், அவருடைய ஆட்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்

58

58