பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருந்தார் காமராஜ். இதல்ை நேருவுக்கு விரோதமான சக்தி எதுவாயிருப்பினும் அதை உடைத்தெறிய அவர் தயங்கியதே இல்லை.

1948-ஆம் ஆண்டு இறுதியில் அகில இந்தியக் காங்கிரஸ் பிரசிடெண்ட் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் டாக்டர் பட்டாபி சீதாராமய்யாவும் புருஷோத்தம தாஸ் தாண்டனும் போட்டியிட்டார்கள். பட்டாபி சீதாராமய்யா ஏற்கனவே ஒருமுறை அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைக்குப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர். அந்தத் தோல்வியை குறித்து மகாத்மா, 'பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று கூறியது சரித்திர முக்கியத்துவம் பெற்றது. மீண்டுப பட்டாபி தாண்டனுடன் போட்டியிட்டபோது அவரை வெற்றி அடையச் செய்வதில் காமராஜ் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். அச்சமயம் நேருஜியின் மந்திரி சபையின் கொள்கைகளைக் குறை கூறுவதே தாண்டனுடைய தொழிலா யிருந்தது. இதல்ை தாண்டன் வெற்றியைக் காமராஜ் விரும்பவில்லை. 'தாண்டன் வெற்றி பெற்ருல் அவர் அமைக்கும் காரியக் கமிட்டிக்கும் நேருஜிக்கும் இடையே ஒற்றுமை இராது. தகராறுகள் வளரும். இதல்ை நேருஜி பிரதமர் பதவியிலிருந்தே விலகக்கூடும். இது தேசத்துக்கு நல்லதல்ல. ஆகையால் நேருஜியின் மந்திரி சபைக்கும் அதன் கொள்கைகளுக்கும் ஒத்துப் போகக் கூடிய, ஆதரவு தேடித் தரக்கூடிய வகையில் கமிட்டி அமைய வேண்டும். அதற்குப் பட்டாபி சீதாராமய்யாவின் வெற்றிதான் முக்கியம்' என்று எண்ணினர் காமராஜ். அதனல் பட்டாபிக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் அவர் வேலை செய்தார். அதன் பயனாகப் பட்டாபிக்கு நல்ல ஆதரவு கிட்டியது. ஆந்திராவில் கூடப் பட்டாபிக்கு அவ்வளவு ஆதரவு கிட்டவில்லை.

கடைசியாகத் தலைவர் தேர்தலில் வோட்டுக்களை எண்ணிப் ப்ார்த்தபோது பட்டாபிக்கே வெற்றி கிட்டியது. இந்த வெற்றிக்கு'முழுக்க முழுக்க்ப் பாடுபட்டவர் காமராஜ் தான் என்பதை ந்ேருஜி புரிந்து கொண்டார். காமராஜின் சக்தி எத்தகையது என்பதை அவர் அறிந்து கொண்டதும்

59

59