பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காமராஜ் அதையெல்லாம் சங்கோசத்துடன் கேட்டுக்கொண்டு மெளனமாக உட்கார்ந்திருந்தார்.

டில்லியில் காமராஜின் அன்றாட அலுவல்களைப் போட்டோ எடுத்துத் தரும்படி நண்பர் நடராஜனைக் கேட்டிருந்தேன். நடராஜன் காமராஜுக்கு நீண்ட நாட்களாக அறிமுகமானவர். காமராஜ் போகும் இடங்களுக்கெல்லாம் அவரைப் பின்பற்றி நானும், நடராஜனும் போய்க் கொண்டிருந்தோம்.

அந்தக் காலத்தில் காமராஜின் ‘வலது கரம்’ என்று சொல்லக்கூடிய திரு. ராஜகோபாலன் ஒரு நாள் காலை ஆகாரத்துக்குத் தம் இல்லத்துக்கு வரும்படி காமராஜையும், கூடவே எங்களையும் அழைத்திருந்தார். அன்று நாங்கள் சாப்பிட்டு முடிக்கும்போது மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது.

அன்று காலை ஒன்பது மணிக்கு நேரு வீட்டில் காமராஜ் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான கூட்டம் ஒன்று இருந்தது. காமராஜுக்கு அது தெரியாது. கூட்டம் பத்தரை மணிக்கு என்றுதான் அவரிடம் யாரோ தகவல் கொடுத்திருந்தார்கள். அதனால் அவர் சாவகாசமாக ராஜகோபாலன் விட்டில் உட்கார்த்து பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று நேரு வீட்டிலிருந்து ராஜகோபாலனை இந்திரா காந்தி டெலிபோனில் அழைத்து, "காமராஜ் அங்கே இருக்கிறரா? ஒன்பது மணிக்கு மீட்டிங் இருக்கிறதே! இங்கே எல்லாத் தலைவர்களும் வந்து காத்திருக்கிறார்கள். நேருஜி காமராஜுக்காகக் கூட்டத்தை ஆரம்பிக்காமல் உட்கார்ந்திருக்கிறாரே!" என்றார். ராஜகோபாலன் இந்தச் செய்தியைக் காமராஜிடம் சொன்னபோது அவர் பதறிப் போனார், “நேற்று என்னிடம் பத்தரை மணிக்குக் கூட்டம் என்றுதானே சொன்னார்கள். ஒன்பது மணிக்கு மாற்றிய செய்தி எனக்குத் தெரியாதே? சரி சரி, வண்டியை எடுக்கச் சொல்லு!” என்று வேகமாக எழுத்து வாசலுக்கு விரைந்தார்.

“நேருஜியையும், மற்றவர்களையும் வீணாகக் காக்க வைத்து விட்டோமே ! தன்னைப் பற்றி நேரு என்ன நினைத்துக்கொள்

6