பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போதுதான். அதற்குப் பிறகு காமராஜின் பெருமையை அவர் உணர்ந்தது. ஆவடி காங்கிரசின்போது. இந்த தேர்தலில் தாண்டன் வெற்றி பெற வேண்டுமென்று சர்தார் படேல் விரும்பினார். ஆனால் அவர் விருப்பத்துக்கு மாறாகக் காமராஜ் வேலை செய்து பட்டாபியை வெற்றி பெறச் செய்தது படேலுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அச்சமயம் படேல் காமராஜைப் பார்த்து, “உங்களுக்கு என் மீது என்ன கோபம்?” என்று கேட்டார்.

“உங்கள் மீது எனக்கு என்ன கோபம் இருக்க முடியும்?” என்றார் காமராஜ்.

“பின் ஏன் பட்டாபி வெற்றி பெறப் பாடுபட்டீர்கள்?”

“தமிழ்நாட்டில் பட்டாபிக்கு ஆதரவு இருந்தது. அவர் வெற்றி பெற்றார். அவ்வளவுதான்!” என்ருர் காமராஜ்.

அப்புறம் 1950-இல் தாண்டன் காங்கிரஸ் தலைவரான போது காமராஜ் எதிர்பார்த்தபடியே காரியங்கள் நடக்கத் தொடங்கின. அவர் அமைத்த காரியக் கமிட்டி நேருவுக்குத் திருப்தியாக இல்லை. அதை மாற்றியமைக்கும்படி அவர் தாண்டனிடம் கூறினார். தாண்டன் அதற்கு இணங்க மறுத்தார். அதனால் நேருஜி காரியக் கமிட்டியிலிருந்தே விலகும்படி நேர்ந்தது.

60