பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சா. கணேசன் என்று முடிவாயிற்று. ஏற்கெனவே திருப்பரங் குன்றத்தில் நடைபெற்ற ராஜாஜி எதிர்ப்பு மகாநாட்டில் சா. கணேசன் கலந்து கொண்டார். ஆனலும் அவர் காமராஜுக்கு எதிராகப் போட்டியிட முன்வந்தபோது பலருக்கு ஆச்சரிய மாகவே இருந்தது.

அந்தத் தேர்தலில் காமராஜுக்கு 152 வோட்டுகளும், சா. கணேசனுக்கு 90 வோட்டுகளுமே கிடைத்தன. இதற்குப் பிறகு 1948-இல் நடைபெற்ற தலைவர் தேர்தலில் காமராஜை எதிர்த்துப் போட்டியிடும் துணிவு யாருக்கும் உண்டாகவில்லை. ஆகவே, காமராஜே காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு ஒருமுக மாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். -

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1950-இல் மீண்டும் தலைமைப் பதவிக்குத் தேர்தல் நடந்தபோது கோயமுத்தூர் சி.பி. சுப்பையா, காமராஜை எதிர்த்து நின்ருர். அப்போதும் காமராஜே வெற்றி பெற்ருர். சுப்பையாவுக்கு 99 வோட்டு களும், காமராஜுக்கு 155 வோட்டுகளும் கிடைத்தன. -

அச்சமயம் ராஜாஜி டில்லியில் மந்திரியாக இருந்தார். காமராஜ் டில்லிக்குப் போகும்போதெல்லாம் ராஜாஜியைச் சந்தித்துப் பேசிவிட்டு வருவது வழக்கம். ஒரு சமயம் அவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, 'இந்த முறை சி.பி. சுப்பையா தான் தமிழ்நாடு காங்கிரஸ் பிரஸிடெண்டாக வரட்டுமே” என்று காமராஜிடம் தம் அபிப்பிராயத்தைத் தெரிவித்தார் ராஜாஜி. - - . . . " - 'பேஷாக வரட்டுமே எனக்கு ஆட்சேபம் இல்லை' என்று சொல்லிவிட்டு வந்தார் காமராஜ். - -- -

ஆனல் காமராஜை அவருடைய நண்பர்கள் விடவில்லை. காமராஜே தான் தலைவராக வர வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றும் கட்டாயப்படுத்தினர்கள். நண் பர்கள் விருப்பத்துக்கு மாருக நடந்து கொள்ள முடியாத ஒரு நிர்ப்பந்த நிலை காமராஜுக்கு ஏற்பட்டதால், சுப்பையாவுடன் போட்டியிட வேண்டிய தர்ம சங்கடம் அவருக்கு ஏற்பட்டது.

கடைசியாக 1952-இல் பொது தேர்தல் நடந்தபோது அந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு மெஜாரிட்டி கிடைக்காத

62.

62