பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தால் காமராஜ் தம்முடைய தலைமை பதவியை ராஜிநாமா செய்ய நேரிட்டது. ஆனால் அதே ஆண்டு இறுதியில் தலைவர் தேர்தல் நடந்தபோது காமராஜே மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த இடைக்காலத்தில் சில மாதங்களுக்கு மட்டுமே டாக்டர் சுப்பராயன் காங்கிரஸ் தலைவராக இருந்தார். சுப்பராயன் காங்கிரஸ் தலைவரானதற்கும் காமராஜேதான் வேலை செய்தார்.

"என்னுடைய தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமயம் பொதுத் தேர்தலில் காங்கிரஸுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் அதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது நான் தான். ஆகவே நான் ராஜிநாமா செய்து விட்டு வேருெரு வரைத் தலைவராக்குவதுதான் முறை' என்று கூறி, டாக்டர் சுப்பராயனைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கச் செய்தார்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு; பொதுத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கட்சி ராஜாஜியின் தலைமையில் மந்திரிசபை அமைக்க முடிவு செய்திருந்ததால், அவருடன் இணங்கி வேலை செய்யக்கூடிய ஒருவரையே காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காமராஜ் விரும்பினர். அதனாலயே சுப்பராயன் தலைவரானதும், அவருக்கு உதவியாகக் காங்கிரஸ் வேலைகளைத் தாமே கவனித் துக் கொள்ளவும் செய்தார்.

அது மட்டுமல்ல, அப்போதிருந்த நெருக்கடியான நிலையில் ராஜாஜியைத் தவிர வேறு யாராலும் நல்ல முறையில் ஆட்சி . செலுத்த முடியாது என்பதை நன்கு அறிந்தார் காமராஜ். 'ராஜாஜி முதலமைச்சராக வர வேண்டும் என்பதில் காம ராஜுக்கு எவ்வளவு அக்கறை இருந்ததோ, அந்த அளவு ராஜாஜிக்கு உற்ற ஒர் காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும். என்பதிலும் இருந்தது.

இதற்குப் பிறகுதான் அடியோடு முறிந்து போயிருந்த காமராஜ்-ராஜாஜி உறவு கொஞ்சங் கொஞ்சமாகச் சீரடைந்து வலுப்பெறத் தொடங்கியது. ராஜாஜி முதலமைச்சரான பிறகு

63