பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராஜைப் பாராட்டி ஒரு முறை பேசினர்: 'காங்கிரஸ். அலுவல்களைக் காமராஜே கவனித்துக் கொள்கிற வரை எனக்கு அதைப்பற்றிய கவலை இல்லை. அதைப் போலவே நான் முத லமைச்சராக இருக்கிறவரை இந்த ராஜ்யத்தின் நிர்வாகத்தைப் பற்றிய கவலையும் காமராஜுக்கு இருக்காது."

இதே மாதிரியான ஒரு நிலைதான் புருஷோத்தமதாஸ் தாண்டன் அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைக்குப் போட்டி யிட்டபோதும் ஏற்பட்டது. அப்போதும் நேருஜி பிரதமராக இருக்கும்போது, அவருடன் ஒத்துப் போகிற ஒருவர்தான் காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் என்று காமராஜ் விரும்பினர். ஏனெனில், தாண்டன் நேருஜியின் கொள்கைகளை ஆதரிக்காதவர். அதஞல் அவருடைய தலைமை ஆபத்தில் முடியும் என்பதை உணர்ந்த காமராஜ், பட்டாபி சீதாராமய் யாவின் நிலைமைக்காகப் பாடுபட்டார். காமராஜ் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியின் காரணமாகவே பட்டாபி அப் போது வெற்றி பெற்ருர். ‘. . . . . ஆஞலும் 1950-ஆம் ஆண்டு நாலிக்கில் மீண்டும் தலைவர் தேர்தல் நடந்தபோது தாண்டன் வெற்றி பெற்று விட்டார். அவருக்கும் நேருஜிக்கும் ஒத்து வரவில்லை. அவர் அமைத்த காரியக் கமிட்டி நேருஜிக்குத் திருப்திகரமாக இல்லை. அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று நேருஜி கேட்டுக் கொண்டும் தாண்டன் அதற்குச் செவி சாய்க்கவில்லை. இதல்ை அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து நேருஜி விலகிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லே என்ற நிலை ஏற்பட்டது. 1951 செப்டம்பரில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி யின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்ஞலேயே நேருஜி காங் கிரஸ் கமிட்டியிலிருந்து விலகிக் கொண்டார். நேருஜி இல்லாத கமிட்டி நாட்டுக்கு நல்வழி காட்ட முடியாது என்றும், நேரு வின் தலைமை அவசியம் என்றும் காமராஜ் கருதினர். அதனல் நேருஜிக்கு ஆதரவாக வேலை செய்யத் தொடங்கினர். அதன் பயஞக அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் நேருவுக்கு ஆதரவு அதிகமாகப் பெருகியுள்ளதை அறிந்த தாண்டன் தம் முடைய பிரசிடெண்ட் பதவியை ராஜிநாமா செய்து விட்டு,

64