பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“காரியக் கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று நேருஜி கூறுகிறார். இதற்கு நேரு கூறும் காரணத்தை நான் ஒப்புக் கொள்ள முடியாது” என்றார்.

இதனால் நேருஜிக்கும், தாண்டனுக்கும் ஏற்பட இருந்த தகராறுகளெல்லாம் அடிபட்டுப் போயின. தேர்தல் நடைபெறப் போகும் நேரத்தில், காங்கிரஸ் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையே தகராறுகள் வளர்ந்து கொண்டிருந்தால் அதன் விளைவு என்னவாகும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. காமராஜ் இதனை முற்றும் உணர்ந்திருந்ததால்தான் நேருவுக்கு ஆதரவு தேடுவதற்காகத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய இடங்களில் முனைந்து வேலை செய்தார். அவர் அன்று செய்த வேலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு, நம் நாட்டுக்குக் காமராஜ் செய்த தொண்டுகளிலேயே மிகச் சிறந்ததுமாகும்.

65