பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

LDரவக்காடு என்பது தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறு கிராமம். அங்கிருந்து தம்பிக் கோட்டை என்னும் ஊருக்கு ஐந்தாறு மைல் தூரம் இருக்கலாம்.

இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னுல் காமராஜ் அந்தப் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டே ஊர் ஊராகச் சூருவளிச் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார்.

மரவக்காட்டில் கூட்டம் தொடங்கியபோது மணி எட்டுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த ஊர்க் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு, அப்புறம் தம்பிக் கோட்டைக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும். தம்பிக் கோட்டைக்குச் செல்லும் பாதையின் காமராஜைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று சிலர் திட்டம் போட்டிருந்தார்கள். -

இந்த நிகழ்ச்சி பற்றிக் காமராஜ் முன்னெரு முறை என்னிடம் உணர்ச்சி வசப்பட்டுக் கூறியது என் நினைவில் இருந்தது. 'அந்த மரவக்காட்டு நிகழ்ச்சியைக் கொஞ்சம் விவரமாகச் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் காமராஜ் சிரித்துக் கொண்டே, "ஆமாம், மரவக்காட்டிலே நான் பேசிக் கிட்டிருக்கேன். ஒரு பஸ் டிரைவர் மேடை மேலே ஏறி வந்து என் காதோடு உங்களை வழியில் மடக்கி அடிக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நீங்க ராத்திரி அந்தப் பக்கம் போகாதீங்கன்னரு. ஆகட்டும். பார்க்கலாம்னு அவர்கிட்டே சொல்லி அனுப்பிச்சுட்டு, கூட்டத்திலிருந்த ஜனங்களைப் பார்த்து, 'யாரோ தம்பிக்கோட்டைக்குப் போற வழியிலே

66

66