பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னை மடக்கி அடிக்கப் போருங்களாம். அடிக்கட்டுமே பார்க்கலாம்! இவங்களுக்குப் பயந்து கூட்டத்துக்குப் போகா மல் இருந்துட முடியுமா, என்ன? நான் காரிலே போகப் போற தில்லே, நடந்தேதான் போகப் போறேன். தம்பிக்கோட்டை வரைக்கும் நீங்களும் கூட்டமா என் கூடவே வாங்க அவங்க யாருங்கிறதைப் பார்த்துடலாம்னு பேசினேன். அவ்வளவு தான்; அவ்வளவு பேரும், காமராஜூக்கு ஜே"ன்னு சொல்லிக் கொண்டு கூட்ட்மா என் கூடவே நடந்து வர ஆரம்பிச் சுட்டாங்க, பாதி வழியிலே சாலைக்குக் குறுக்கே கட்டை போட்டுக் கட்டி வச்சிட்டுப் பக்கத்திலே பதுங்கி நின்னு கவனிச்சுக்கிட்டிருந்தாங்க. எங்களைக் கண்டதும் ஒரே ஒட்டமா ஒடிப் போயிட்டாங்க!' என்ருர் காமராஜ்.

காமராஜ் அதிகம் படித்தவரல்ல; ஆங்கில மொழியிலும் அவரால் சரளமாகப் பேசவோ, எழுதவோ முடியாது. இந்தி மொழியும் சுமாராகத்தான் தெரியும். ஆனல் ஒரு நாட்டை ஆளுவதற்கு மொழிப் புலமை முக்கியமல்ல என்பதை நிரூபித்துக் காட்டியவர் காம்ராஜ். 1954ஆம் ஆண்டில் கோமராஜ் இந்த ராஜ்யத்தின் முதலமைச்சராக வந்தார். பிறகு ஒன்பது வருடங்கள் தொடர்ந்து முதலமைச்சராகவே இருந் தார். இந்த ஒன்பது ஆண்டுக் காலத்தில் சென்னை ராஜ்யம் மற்ற ஆமாநிலங்கள் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த முறையில் நிர்வாகம் செய்யப்பட்ட ராஜ்யம் என்ற புகழைப் பெற்றது. பொருளாதாரத் துறையிலும், சமூகத் துறையிலும் எல்லா மாநிலங்களையும் மிஞ்சி நின்றது. காமராஜின் ஆட்சிக் காலத்தில் ஏராளமான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி வசதி அளிக்கப்பட்டது. மக்களின் அறியாமை இருளை போக்கக் கல்விக் கூடங்களைத் திறந்ததைப் போலவே கிராமங்களைச் சூழ்ந்திருந்த இருளைப் போக்க மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதும் காமராஜின் ஆட்சியில்தான். - - - - ; :, . . "

காமராஜ் பூகோளம் படிக்கவில்லைதான். ஆலுைம் இந்த மாநிலத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் அவர் பல முறை சென்றிருக்கிரு.ர். இந்த மாநிலத்திலுள்ள ஏரிகள், குளங்கள்.

67

67