பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணைக்கட்டுகள், சாலைகள் எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் கால் வைக்காத கிராமமோ, தொழிற்சாலையோ நம் ராஜ்யத்தில் வெகு அபூர்வமாகத்தான் இருக்கும். .

காமராஜ் முதலமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன் இரண்டாண்டுக் காலம் ராஜாஜி இந்த ராஜ்யத்தின் நிர்வாகத்தை ஏற்று ஒப்புயர்வற்ற முறையில் ஆட்சி நடத்தினர். ராஜாஜியின் ஆட்சி தொடர்ந்து இருக்க வேண்டுமென்று காமராஜ் அப்போது விரும்பினர். அச்சமயம் ராஜாஜி இந்த மாநிலத்திலுள்ள குழந்தைகள் எல்லோரும் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் முறையில் ஆரம்புக் கல்வித் திட்டம் என்ருெரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தைக் காங்கிரசில் உள்ளவர்கள் 'குலக்கல்வித் திட்டம்' என்று குறை கூறி எதிர்த்தார்கள். ராஜாஜி அவர்கள் எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை. தம்முடைய மந்திரி சபையில் கல்வி மந்திரியாக இருந்தவரிடம் இத்திட்டம் பற்றிக் கலந்து ஆலோசிக்கவுமில்லே, சட்டசபைக் காங்கிரஸ் கட்சி யிடமும் கலக்கவில்லை. இதையெல்லாம் எடுத்துச் சொல்லி ராஜாஜி மீது எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டினர்கள்.

'சங்கரும் ராமானுஜரும் தங்கள் கொள்கைகளை வெளி யிடுமுன் மற்றவர்களிடம் கலந்து கொண்டா செய்தார்கள்?" என்று ராஜாஜி அவர்களைத் திருப்பிக் கேட்டர்ர். எதிர்ப்பைக் கண்டு எப்போதுமே அஞ்சாத ராஜாஜி இந்த முறையும் தான் ச்ொன்னதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னர். இதல்ை எதிர்ப்பு மேலும் பலமாயிற்று. அதைத் தொடர்ந்து ராஜாஜியின் பிடிவாதமும் அதிகமாயிற்று. - . -

சட்டசபைக் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் அந்தத் திட்டம் விவாதத்துக்கு வந்தபோதெல்லாம் அதை வோட்டுக்கு விடாமலே ஒத்தி வைத்துக் கொண்டிருந்தவர் காமராஜ்தான். ராஜாஜியின் ஆரம்பக் கல்வித் திட்டம் காமராஜுக்குப் பிடித்திருந்ததோ இல்லையோ, ராஜாஜியின் ஆட்சி அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அந்த நெருக்கடியான நேரத்தில் ராஜாஜியின் சேவையை அவர் பெரிதும் விரும்பினர். அதஞலேயே அந்தத் திட்டம் விவாதத்துக்கு வந்தபோதெல்

68.

68