பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாம் அதை வோட்டுக்கு விடாமலே தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்புறம் கொஞ்ச நாட்களுக்கெல்லாம் ஆந்திர மாகாணம் பிரிந்துவிட்டதால் சென்னை சட்டசபைக் காங்கிரஸ் கட்சிக்குப் புதுத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு கிளர்ச்சி தோன் றியது. 'தலைவர் தேர்தல் நடந்தால் ராஜாஜியை வேண்டாம் என்று எண்ணுபவர்கள் அப்போது வேறு தலைவரைத் தேர்ந் தெடுத்துக் கொள்ளட்டுமே என்பதுதான் காமராஜின் எண்ணம். இந்தச் சமயம் ராஜாஜி, காமராஜ் இருவரையும் டில்லிக்கு அழைத்துப் பேசிஞர் நேருஜி. ராஜாஜியே தொடர்ந்து முதல்மைச்சராக இருக்க வேண்டும் என்று நேருஜி அறிக்கை வெளியிட்டார். நேருஜி கூறிவிட்டதால் இனி எதிர்ப்பு. இருக்காதுஎன்றே பலர் எதிர்பார்த்தார்கள். ஆளுல் அப்' நடக்கவில்லை. ராஜாஜிக்கு எதிராகவும் ஆதரவாகவும் இரண்டு கோஷ்டியார் வேலை செய்து கையெழுத்து வாங்கினர்கள். 'இதெல்லாம் எதற்கு? நான்ே விலகிக் கொள்கிறேன். கல்வித் திட்டத்தின் மீது வோட்டெடுக்க வேண்டிய அவசியமில்லை' என்று ராஜாஜி கூறிஞர். . . . . அடுத்த சில நாட்களுக்குள் தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும், ஆகையால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாகவும் ராஜாஜி அறிக்கை வெளியிட்டார்

1954ஆம் வருடம் மார்ச்சு மாதம் 25ஆம் தேதி ராஜாஜி சட்ட சபைக்கு வந்து தாம் விலகப் போகும் செய்தியை அறிவித்தார். பிறகு நடந்த கட்சித் தலைவர் தேர்தலில் காமராஜூம், சி. சுப்பிரமணியமும் போட்டியிட்டார்கள். காமராஜுக்கு 98 வோட்டுக்களும் சுப்பிரமணியத்துக்கு 41 வோட்டுக்களும் கிட்ைத்தன. ". . .

. காமராஜ் அமைத்த எட்டுப்பேர் மந்திரி சபையில் சி. சுப் பிரமணியத்தையும் சேர்த்துக் கொண்டது காமராஜின் பெருந்: தன்மையைக் காட்டியது. சி. சுப்பிரமணியமும் காமராஜ"-" சேர்ந்து சிறந்த முறையில் பணியாற்றியது அவரு-ை" - உயர்ந்த குணத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்கியது.

69

69