பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

"ஜாஜி 1954-இல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்த போது, "அவருக்கு அடுத்த படியாக அந்தப் பதவியைத் திறம்பட வகிக்கும் தகுதியும், ஆற்றலும் உள்ள தலைவர் யார்?’ என்ற கேள்வி தமிழ் நாட் டில் எழுந்தது. சி. சுப்பிரமணியம், டாக்டர் சுப்பராயன், ஷெட்டி - இவர்கள் பெயர் அடிபட்டன. x -

காமராஜ் அப்போதுதான் தம்முடைய மலேயா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ் நாட்டுக்குத் திரும்பி யிருந்தார். -

அவருடைய எண்ணமெல்லாம் கட்சி வேலையிலேயே இருந்து வந்ததால், நல்ல முறையில் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய ஒரு மந்திரி சபையை அமைத்து விட்டு, அந்த மந்திரி சபைக்குப் பக்கபலமாகத் தாம் வெளியிலிருந்த படியே வேலை செய்யலாம் என்றுதான் நினைத்தார். அடுத்த மந்திரி சபை அமைப்புப் பற்றி ராஜாஜியைக் கலந்து ஆலோசித்தார். . - . . .

'இன்னும் இரண்டு மூன்று மாதங்கள்வரை இப்போதுள்ள. மந்திரி சபையே தொடர்ந்து நடக்கட்டும். அடுத்தாற் போல் பட்ஜெட் கூட்டம் வருகிறது. அது முடிந்தபின் கட்சித் தலைவர் தேர்தலை நடத்தலாம்” என்று கூறிஞர் ராஜாஜி.

“ரொம்ப சரி அதுவரை பக்தவத்சலம், சுப்பிரமணியம், ஷெட்டி - இந்த மூவரில் ஒருவரே முதலமைச்சராயிருக்கட் டும்' என்ருர் காமராஜ். --

70

70