பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சிக் கூட்டம் நடந்த போது சி. சுப்பிரமணியத்தின் பெயரை ராஜாஜி பிரேரேபித்தார். ஆளுல் பட்ஜெட் கூட் டம்வரை இது இடைக்கால ஏற்பாடுதான் என்பதை அவர் சொல்லவில்லே. - - -- காமராஜ் எழுந்து 'இந்த ஏற்பாட்டை இரண்டு மாதங் களுக்குத்தான் ஒப்புக்கொள்ள முடியும். அப்புறம் தலைவர் தேர்தலை நடத்தி ஆக வேண்டும்' என்ருர். . .

ராஜாஜி கட்சியைச் சேர்ந்தவர்கள் இதை ஆட்சேபித் தார்கள். இரு கட்சிகளுக்கிடையே எந்தச் சமரசமும் ஏற்பட வில்லை. இதஞல் தேர்தலை உடனே நடத்தி விடுவதென்று காமராஜ் முடிவு செய்தார். - -

சி. சுப்பிரமணியந்தான் முதலமைச்சராக வருவார் என்று பலர் எதிர்பார்த்தார்கள். இதற்குக் காரணம் ராஜாஜி மந்திரி சபையில் அவருக்கு அடுத்தபடியாகச் சுறுசுறுப்போடு இயங்கியவர் சி. சுப்பிரமணியந்தான். அத்துடன் ராஜாஜியின் அன்பும், ஆதரவும் இவருக்கு இருந்தன. அந்த மந்திரி சபையில் 'பாபுல'ராக இருந்தவரும் சி.எஸ். தான். எனவே அவருக்குத்தான் அடுத்த மாலை' என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். -

இதற்கிடையில் காமராஜின் நண்பர்கள் அவரையே தேர்தலுக்கு நிற்க வேண்டுமென்று கட்டாயப்படுத்திஞர்கள். சி.எஸ். வின் தலைமையை விரும்பாதவர்கள் ஷெட்டியின் பெயரைச் சொன்னர்கள். சிலர் சுப்பராயனை நிறுத்தலாம் என்ருர்கள். கடைசியாக எந்தச் சமரசமும் ஏற்படாததால் காமராஜூம், சி. எஸ்ஸ்-மே போட்டியிட்டனர்.

போட்டியில் காமராஜூக்கே அதிக வோட்டுகள் கிடைத்து வெற்றி அடைந்த போதிலும் தாம்ே முதல் அமைச் சராக வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்படவில்லை. அவர் நினைத்திருந்தால் அந்தப் பதவியை இதற்கு முன்பே அடைந்திருக்கலாமே ! -

கட்சித் தலைவராக மட்டும் இருந்து கொண்டு முதலமைச் சராக வேருெருவரை நியமித்து ஆட்சியை நடத்திக்கொள்ள லாம் என்றுதான் முதலில் காமராஜ் எண்ணிஞர். டில்லிக்குப்

71

71