பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போய் தம்முடைய கருத்தை மேலிடத்திலும் சொல்லிப் பார்த்தார். ஆனால் கட்சித் தலைவரேதான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்றும், அதற்குச் சம்மதம் இல்லை என்றால் முதலமைச்சராக வரக்கூடிய வேறொருவரைத் தேர்ந் தெடுத்துக் கொள்ளலாம் என்று மேலிடத்தார் உறுதியாகச் சொல்லி விட்டார்கள்.

சென்னைக்குத் திரும்பி வந்த காமராஜ் தம்முடைய நண்பர்களைக் கலந்து ஆலோசித்தார்.

"மறுபடியும் தலைவர் தேர்தல் நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. தாங்களே முதலமைச்சராயிருப்பதுதான் சரி' என்று அவருடைய நண்பர்கள் கூறி விட்டார்கள்.

"அப்படியானல் ஒரு நிபந்தனை” என்றார் காமராஜ்.

"என்ன அது?’ என்று கேட்டார்கள் நண்பர்கள்.

"நான் அமைக்கப் போகும் மந்திரி சபையில் என் இஷ் டப்படிதான் மந்திரிகளைச் சேர்த்துக் கொள்வேன்.'அவரைப் போடு, இவரைப் போடு' என்று யாரும் சொல்லக் கூடாது. சம்மதமா?' என்று காமராஜ் கேட்டார். .

"தங்கள் இஷ்டப்படியே செய்யுங்கள். தாங்களே முத லமைச்சராக வருவதுதான் முக்கியம்” என்ருர்கள் நண்பர்கள். காமராஜ் மந்திரி சபையில் ராஜாஜி மந்திரி சபையைச் சேர்ந்தவர்கள் யாருக்குமே இடமிருக்காது என்று எல்லோ ரும் அப்போது எதிர்பார்த்தார்கள்.

காமராஜ் முதலமைச்சராக வந்ததும் தமது மந்திரி சபையில் எட்டுப் பேர்தான் இருப்பார்கள் என்று அறிவித்தார். அந்த எட்டுப் பேரில் ராஜாஜி மந்திரி சபையைச் சேர்ந்தவர்களும் இருப்பார்கள் என்றார்.

அதே மாதிரி ராஜாஜி எதிர்ப்புக் கோஷ்டியில் தீவிர மாக இருந்த ஒருவரையும் தம்முடைய மந்திரி சபையில் அவர் சேர்த்துக் கொண்டார்.

காங்கிரஸை எதிர்த்து வந்த திரு. எஸ்.ராமசாமி படை யாச்சியையும் அவர் மந்திரியாக்கினர். இப்படி எல்லோரையும் திருப்திபடுத்தும் வகையில் மந்திரி சபை அமைத்தது அவருடைய திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது.

72