பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராஜ் முதலமைச்சரானதும் சட்டசபை விவகாரங்

களில் அதிகமாக ஈடுபடாமல், அசெம்பெளி யில் சி. சுப்பிர மணியம் அவர்களையும், மேல் சபையில் திரு. பக்தவத்சலம் அவர்களையும் முக்கியப் பங்கெடுக்கச் செய்தார்.

காமராஜ் ஒன்பது ஆண்டுக் காலம் இந்த ராஜ்யத்தின் முதலமைச்சராக இருந்தார். ஆளுல் சட்டசபையில் அவர் எழுந்து பேசியது ஐந்தாறு சந்தர்ப்பங்களுக்கு மேல் இராது. இதல்ை அவருக்குச் சட்டசபை விவகாரங்களில் அநுபவமோ, ஆற்றலோ இல்லை என்று சொல்லிவிட முடி யாது. எல்லாப் பிரச்னைகளிலும் உள்ள சிக்கல்களையும், அவற்றுக்கு மாற்று என்ன என்பதையும் அவர் தெரிந்து வைத்துக் கொண்டுதான் சபைக்கு வருவார். ஆளுலும் பதில் சொல்லும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொள்ளா மல் சட்ட ஞானமும், வாதிக்கும் திறமையும் பெற்ற வழக் கறிஞர்களான சி. சுப்பிரமணியத்தையும், பக்தவத்சலத்தை யும் பயன்படுத்திக் கொண்டு அவர்களையும் பிரகாசிக்கச் செய்தார். - -

சர்க்கார் இயந்திரங்கள் சரிவர இயங்குவதிலும் சிவப்பு

நாடா முறையை மாற்றிக் காரியங்கள் வேகமாக நடை பெறச் செய்வதிலும் காமராஜ் தனிப்பட்ட முறையில் அக் கறை எடுத்துக் கொண்டார். சர்க்கார் அதிகாரிகள் சட். டத்தை எடுத்துச் சொல்லிக் காரியங்கள் வேகமாக நடப்ப தற்கு முட்டுக்கட்டை போடும்போதெல்லாம். 'மக்களுக்கா கச் சட்டமே தவிரச் சட்டத்துக்காக மக்கள் இல்லை' என் பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி, சட்டத்தில் முரண்பாடு இருந்தால் அதை மாற்றுவதற்கு முற்பட்டார்.

ஒரு சமயம் முதலமைச்சர் காமராஜ் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த போது அப்பனம் தயாரிப்பவர்கள் சிலர் அவரிடம் கூட்டமாக வந்து,"அப் பளத்துக்கு மட்டும் ஆறு பெர்லண்ட் விற்பனை வரி போடு கிறீர்களே, மற்ற உணவுப் பண்டங்களுக்கெல்லாம் இரண்டு பெர்ஸெண்ட்தானே? இது என்ன நியாயம்' என்று கேட் டார்கள். - - - ... "

27

73