பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"அப்படியா சங்கதி? நான் சென்னைக்குப் போனதும் இது பற்றி விசாரிக்கிறேன்" என்று அவர்களுக்குப் பதில் கூறி விட்டு வந்தார்.

சென்னைக்குத் திரும்பியதும் சம்பந்தப்பட்டி மந்திரியையும்,அதிகாரிகளையும் கூப்பிட்டு விசாரித்தார்.

"ஆமாம்,பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களுக்கு ஆறு பெர்ஸெண்ட் விற்பனை வரி என்று சட்டம் இருக்கிறது” என்றார்கள் அதிகாரிகள்.

"பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் என்று சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது வேறு வகை உணவுப் பண்டங்களுக்குத்தான்.அப்பளம் அதில் சேராது” என்று விளக்கினார் காமராஜ்.

அப்புறத்தான் அதிகாரிகளுக்கு விஷயம் புரிந்தது.

74