பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன? எதற்காகப் பதவியிலிருந்து விலகினீர்கள் ?”

"காங்கிரஸ்காரர்கள் பலருக்குப் பதவி மேலே ஆசை வந்துட்டுது. உயர்ந்த பதவியில் இருக்கிறவர்களைப் பார்த்துத் தாமும் ஒரு மந்திரியா வரணும்னு அவங்க நினைக்கிறாங்க. பதவிங்கிறது மக்களுக்குச் சேவை செய்யறதுக்குத் தான் என்கிறதை மறந்துடறாங்க. இதனாலே காங்கிரஸ் கட்சி வேலை சரியா நடக்காமல் போயிடுது. கீட்சிக்கும், மக்களுக்கும் சரியான தொடர்பு இல்லாமல் போயிடுது. நேருஜியிடம் இதை பற்றிப் பேசறப்போ, சில பேர் பதவியிலிருந்து விலகிக் கட்சி வேலை செய்யணும்னு சொன்னேன். அவருக்கு என் திட்டம் ரொம்பப் பிடிச்சிருந்தது. எதுக்கும் ஒரு பெர்ஸ்பெக்டிவ் வேணுமில்லையா? நாமே பதவியிலே உட்கார்ந்துகிட்டிருந்தா நாம் செய்யறது சரியா, தப்பாங்கிறது நமக்குச் சரிபாப் புரியாது. அதனாலே பதவியிலிருந்து விலகிப் போய்ப் பார்த்தால்தான் சரியான 'பெர்ஸ்பெக்டிவ்'வா இருக்கும்னு தோணிச்சு. கோபுரத்தின் உள்ளே இருந்து அதை அண்ணாந்து பார்க்கிறதைவிட, வெளியே போய்த் தூர நின்னு பார்த்தால் 'கரெக்ட் பெர்ஸ்பெக்டிவ்' கிடைக்கும் இல்லையா? அதுக்காகத்தான் ராஜிநாமா செய்தேன்.

என் திட்டத்தைப் பற்றி 1963 ஆகஸ்ட்லே காங்கிரஸ் காரியக் கமிட்டியிலே நேருஜி எடுத்துச் சொல்லி அங்கீகாரம் வாங்கினார். அதுக்குத்தான் 'காமராஜ் திட்டம்னு’ பேர் வந்தது. அப்புறம் ரெண்டு மாசத்துக்கெல்லாம் டில்லி மந்திரி சபையிலேருந்து ஆறு காபினெட் மந்திரிகளும், ராஜ்ய மந்திரி சபைகளிலிருந்து ஆறு முதல் மந்திரிகளும். ஆக மொத்தம் பன்னிரண்டு பேர் ராஜிநாமா செய்தோம்."

“பதவியிலிருக்கிறப்போ உங்களைப் பல பேர் வந்து சலுகை கேட்டிருப்பாங்களே. அவங்களுக்கெல்லாம் ஏதாவது செய்தீங்களா?”

"எங்கிட்டே எல்லாரும் வருவாங்க. பேசுவாங்க. சலுகை கேட்பாங்க. நானும் செய்வேன். ஊருக்குப் பொது

76