பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வான, மக்களுக்குப் பொதுவான சலுகையாய் இருந்தால் செய்வேன். சொந்த முறையில் சலுகை கேட்டால் எப்படிச் செய்ய முடியும்? எனக்கு எவ்வளவு வேண்டியவங்களாயிருந்தாலும் நியாயமில்லாத முறையில் கேட்டால், அது முறையில்லே, முடியாது'ன்னுதான் பதில் சொல்லி அனுப்புவேன். அப்புறமும் அவங்க தயங்கித் தயங்கி நேரத்தை வீண் பண்ணுங்கன்னா மணியடிச்சு அடுத்தவங்களை உள்ளே வரச் சொல்லுவேன். வேறே என்ன செய்யறது ?"

'காமராஜ் நம்மிடம் இவ்வளவு அன்பாகப் பேசுகிறாரே. இவ்வளவு நட்போடு பழகுகிறாரே, அவரிடம், சமயம் பார்த்து. சொந்தக் காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்று யாராவது எண்ணினால் நிச்சயம் அவர்கள் ஏமாந்துதான் போவார்கள். காமராஜை யாரும், எந்தச் சமயத்திலும் ஏமாற்றிவிட முடியாது.

அவருக்கு நாடு, சுதந்திரம், மக்களுடைய நல்வாழ்வு - இவற்றில்தான் எப்போதும் அக்கறை, முதல் மந்திரியாக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், தொண்டராக இருந்தாலும் சிந்தனையும், செயலும் மக்களுக்குத் தொண்டு செய்வதில்தான். முதலமைச்சராகப் பதவி வகித்த போது எதையும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்து. பிரச்னைகளின் தன்மைகளை நுட்பமாகப் புரிந்து கொண்ட பிறகுதான் அவற்றை நிறைவேற்றுவதற்கு அனுமதி வழங்குவார். மேலெழுந்தவாரியாகப் பார்த்து முடிவு செய்வதென்பதோ, அவசரப்பட்டு முடிவு எடுப்பதோ அவர் அகராதியில் கிடையாது.

ஒரு சமயம் பஸ் முதலாளிகள் சிலர் கும்பலாக வந்து "பஸ் விடும் தொழிலில் அதிக லாபம் இல்லை. நஷ்டந்தான் அதிகம். வரியைக் குறைக்க வேண்டும்" என்று சொன்ன போது, "ரொம்ப சரி. நஷ்டம் என்று சொல்கிறீர்கள்; ஒப்புக் கொள்கி றேன். அப்படியானல் எதற்காக மேலும் மேலும் 'ரூட்' கேட் பதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்? நஷ்டத்தில் நடக்கும் தொழிலுக்கு இவ்வளவு போட்டி எதற்கு?" என்று பதில் கேள்வி போட்டுப் பிரச்சனையின் மென்னியைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கினார். அவ்வளவுதான்; வந்தவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறித் திரும்பிப் போய் விட்டார்கள்.

77