பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னொரு சமயம் கோயமுத்துாரில் மருத்துவக் கல்லூரி ஒன்று திறக்க வேண்டும் என்றும், அதற்காகக் கோவையைச் சேர்ந்த சில பணக்காரர்கள் இருபது லட்சம் ரூபாய் நன் கொடை தருவதற்குதி தயாராயிருப்பதாகவும் ஒரு குழுவினர் வந்து கோரிக்கை விடுத்தனர்.

"இந்தத் திட்டத்துக்கு மொத்தம் எவ்வளவு பணம் செலவா கும்?' என்று காமராஜ் கேட்டார்.

“ஒரு கோடி ரூபாய் ஆகும். மிச்சப் பணத்தைச் சென்னைச் சர்க்கார் கொடுக்க வேண்டும். கல்லூரி நிர்வாகத்தை இருபது லட்சம் நன்கொடை கொடுப்பவர்கள் ஏற்று நடத்துவார்கள். சுகாதார மந்திரிகூட இந்தத் திட்டத்தை அங்கீகரித்து விட்டார்” என்றார்கள் வந்தவர்கள்.

"ரொம்பு சரி, சர்க்காரிடமிருந்து எண்பது லட்சம் ரூபாய் எதிர்பார்க்கிறீர்கள், இல்லையா?" என்று கேட்டார் காமராஜ். "ஆமாம்."

'எண்பது லட்சம் கொடுக்கக்கூடிய சர்க்காரால் இன்னும் ஒர் இருபது லட்சமும் சேர்த்து ஒரு கோடியாகவே கொடுக்க முடியாதா?” 'முடியும்.”

"அப்படின்னு ஒரு கோடியைச் சர்க்காரே போட்டுச் சர்க்கார் கல்லூரியாகவே அதை நடத்திடலாமே! நீங்க எதுக்கு நிர்வாகம் செய்யணும்? இது என்ன நியாயம்? உங்க வீட்டுக்கு வர விருந்தாளி உங்க வீட்டுச் செலவிலே பத்திலே ஒரு பங்கு செலவழிக்கிறதா வெச்சுக்குவோம். அவன் உங்க பணத்தை யெல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டு நிர்வாகத்தைத் தானே நடத்தறதாகச் சொன்னால் அதுக்கு நீங்க சம்மதிப்பீங்களா?' என்று கேட்டார்.

அவ்வளவுதான்; அப்புறம் அந்தத் திட்டத்தைப் பற்றி யாருமே மூச்சு விடவில்லை.

காமராஜ் முதன் முதல் இந்த ராஜ்யத்தின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்ற போது அவர் சென்னைச் சட்டசபையில் அங்கத்தினராக இல்லை. டில்லி பாராளுமன்ற மெம்பராகத் தான் இருந்தார். மந்திரியாக வருகிறவர்கள் சட்டசபை அங்கத்

78