பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினராக இல்லையெனில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஏதா வது ஒரு தொகுதியில் தேர்தலில் நின்று அசெம்பிளி அங்கத் தினராக வரவேண்டும் என்பது விதி. மேல்சபை மெம்பராக வருவது சுலபம். ஆளுல் அது ஜனநாயக முறைக்கு அவ்வளவு பொருத்தம் ஆகாது. அசெம்பிளித் தேர்தலில்தான் மிக்க்ளின் நேரடியான கருத்தை அறிந்து கொள்ள முடியும். ஜனநாயகத் தில் அசைக்க முடியாத பற்றுதலும், நம்பிக்கையும் கொண்ட காமராஜ் அசெம்பிளி தேர்தலில் நின்று வெற்றி பெறவே விரும் பினர். அப்படியானல் எந்தத் தொகுதியில் நிற்பது? விருது நகர் அவர் சொந்த ஊர். அங்கே நின்று வெற்றி பெறுவதுதான் வழக்கம். இம்முறை அம்மாதிரி நிற்பதென்ருல் ஏற்கெனவே அங்கு. எம்.எல்.ஏ ஆக உள்ள ஒருவரை விலகிக் கொள்ளச் செய்ய வேண்டும். அதைவிட வேறு எங்காவது காலியாகும் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெறுவதையே காமராஜ் விரும்பினர். குடியாத்தம் தொகுதியில் ஒரு ஸ்தானம் காலியா யிருந்ததால் அங்கே வந்து நிற்கும்படி அந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் காமராஜைத் கேட்டுக் கொண்டார்கள். காம ராஜ் 'சரி என்ருர் வேருெரு தொகுதியில் போய் நிற்பதற்கு ரொம்ப தைரியம் வேண்டும். காமராஜ் அதற்குத் துணிந்தார். குடியாத்தம் தேர்தலின் போது தமிழ் நாட்டின் கவனம் முழுதும் அங்கேதான் இருந்தது. தமிழ் நாட்டின் காங்கிரஸ் பிரசாரகர்கள் எல்லாரும் குடியர்த்தத்தில் போய் முகாம் போட்டார்கள். திராவிடக் கட்சியும், முஸ்லிம் லீக்கும் காம ராஜுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தன. முடிவு? - காம் ராஜே வெற்றி பெற்ருர். -

இந்த ராஜ்யத்தின் முதல் அமைச்சராகப் பதவி வகித்த காமராஜ் மக்களின் சேவைக்க்ாகவே அந்தப் பதவியை வகித் தார். சொந்தத்தில் ஒரு வீடு கட்டிக் கொண்டாரா? கார் வாங் கிக் கொண்டர்ரா? கைக்கடிகாரம் உண்டா? பேளு உண்டா? பாங்கில் பணம் போட்டு வைத்தாரா? முதலமைச்சராகும் முன்பு எப்படி எளிய வாழ்க்கை நடத்தி வந்தாரோ அப்படியே தான் அணுவளவும் மாருமல் இன்றளவும் வாழ்ந்து வருகிரு.ர். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காகப் பாடுபட்டு வரும்

79

79