பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.

வரலாறு கண்டிராத வகையில், நேருஜியே கண்டு வியக் கும் வண்ணம் 1955-இல் நடைபெற்றது. ஆவடி காங்கிரஸ். இந்த மாபெரும் மாநாட்டின் வெற்றிக்கு மூலகாரண புருஷ ராயிருந்தவர் திரு. காமராஜ். . . .

இதற்கு முன்னுல் டாக்டர் அன்ஸாரி தலைமையில் 1927-ல் சென்னை எழும்பூர் ஸ்பர்டாங்க் மைதானத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கும் ஆவடியில் நடைப்ெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தி யாசம் இருந்தது. - -

அந்தக் காலத்தில் எழும்பூரில் நடைபெற்ற காங்கிரஸ்

மாநாட்டுக்கு மூலக்காரண புருஷராக விளங்கியவர் திரு. எஸ். சீனிவாசய்யங்கார். அவருடைய மகளே தற்போது பூரீநிவாச காந்தி நிலையத்தின் தலைவி யாக் உள்ள திருமதி அம்புஜம்மாள்.

ஆவடி காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டித் தலைவராக இருக்கும் கெளரவத்தைத் திருமதி அம்புஜம்மாளுக்கு அளித்த தன் மூலம் திரு. எஸ். சீனிவாசய்யங்காரை நினைவு கூர்ந்து பெருமைப்படுத்தினர் காமராஜ். அதைப் போலவே தம் முடைய அரசியல் குருவான திரு. எஸ். சத்தியமூர்த்தியின் ஞாபகார்த்தமாக ஆவடி காங்கிரஸ் நடைபெற்ற இடத்துக்கு “சத்தியமூர்த்தி நகர்' என்று பெயர் சூட்டினர்.

ஆவடி காங்கிரஸில்தான் புகழ் பெற்ற சோஷலிஸ்ப் பாணி சமுதாயம் என்ற கவர்ச்சியான சொற்ருெடர் பிறந்தது.

81

81