பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த மாநாட்டின் கோலாகலமான ஏற்பாடுக்களக் கண்டு வியந்த நேருஜி, 'இந்த மாநாட்டின் இத்தனை சிறப்புக்களுக்கும் காரணம், முதலமைச்சர் காமராஜ் நின்ற இடத்தில் ஒரு நிமிஷங் . . கூட நிற்காமல் இங்குமங்கும் ஒடியாடி, எல்லாக் காரியங்களை யும் தாமே கவனித்ததுதான்' என்று பாராட்டிப் பேசியதை இதற்குள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். * . . . .

காம்ராஜை 1936ஆம் ஆண்டிலிருந்தே நேருஜி அறிவார். அந்த ஆண்டு நேருஜி காங்கிரஸ் தலைவராக சென்னை மாகாணத் தில் சுற்றுப் பயண்ம் செய்த போது திரு. சத்தியமூர்த்தியும் காமராஜும் அவருடன் பயணம் செய்தார்கள். 1949-லிருந்து காங்கிரஸ் காரியக் கமிட்டி அங்கத்தினர் என்ற முறையில் நேருஜியை அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பு காமராஜூ க்குக் கிட்டியது. நாளடைவில் நேருஜியின் மதிப்பில் காமராஜ், உயர்ந்து கொண்டே போனர். ஆவடி காங்கிரஸின்போது காமராஜின் உண்மையான மதிப்பு, சக்தி, ஆற்றல், செல்வாக்கு எல்லாமே எவ்வளவு பெரியவை என்பதை நேருஜி நன்கு புரிந்து கொண்டார். . . . . .

ஆவடி காங்கிரஸைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நேருஜி தம்மைப் பணித்தபோது காமராஜ் தமிழ் நாட்டின் காங்கிரஸ் தலைவராக மட்டுமே இருந்தார். ஆவடி யில் மாநாடு நடைபெறுவதற்குள் அவர் தமிழ்நாட்டின் முத லமைச்சராகவும் ஆகிவிட்டார். . . . . . . . . . நேருஜியின் உள்ளத்தில் வளர்பிறை போல் வளர்ந்து கொண்டிருந்த காமராஜின் பெருமை, திறமை ஆகியவை யெல்லாம் அவர் முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து விட்டுத் தம்மைப் போன்ற மூத்த தலைவர்களெல்லாம் கட்சி வேலையில் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்த போது எவரெஸ்ட் அளவுக்கு உயர்ந்து விட்டது. அதுவரை தமிழ்நாட்டுத் தலைவராக மட்டுமே இருந்து வந்த சிவகாமியின் செல்வர் காமராஜ் திட்டத்துக்குப் பின்னர் அகில இந்தியத் தலவராக மாறும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.

"நேருவுக்குப் பிறகு யார்?' என்ற கேள்வி இந்தச் சமயத் தில்தான் எழுந்தது. காங்கிரஸ் தலைவர்களுக்குள் இந்தக்

&#2

82