பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி எழுந்த போதெல்லாம். "இதுபற்றிக் காமராஜ் என்ன நினைக்கிருt' என்ற கேள்வியும் அத்துடன் எழுந்தது. சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா, அதுல்யகோஷ், காமராஜ் ஆக நால்வரும் திருப்பதியில் கூடிச் சாமி கும்பிட்ட பிறகு அந்தப் புண்ணிய ஸ்தலத்திலேயே நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்திஞர்கள். இந்தத் திருப்பதி சந்திப்புத்தான் இந்திய நாட்டின் அரசியலில் ஒரு பெரிய திருப்பத்தையே ஏற்படுத்தி விட்டது. இதுவே பின்னாப் பத் திரிகைக்காரர்களால் லிண்டிகேட் மீட்டிங்' என்று வருணிக்கப்பட்டது. இந்த விண்டிகேட்தான் நேருவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரியைத் தலைவராக்கும் பணியில் முக்கிய பங்கு வகித்தது.

இந்த நால்வருக்குள் திருப்பதியில் எழுந்த இரண்டு முக்கிய கேள்விகள் என்ன தெரியுமா? --

1. நேருவுக்குப் பிறகு யார்: 2.அடுத்த காங்கிரஸ் தலவராக யாரைத் தேர்ந்தெடுப்பது? திரு. சஞ்சீவய்யா அப்போது காங்கிரஸ் தலைவராயிருந் தார். அவருக்குப் பிறகு வரப்போகும் தலவர் தேர்தலில் போட்டி எதுவும் இருக்கக்கூடாது. அதற்கு ஏற்ற தலைவர்

காமராஜா? அதுல்யகோஷா? * : . .

இது இரண்டாவது கேள்வியைத் தொடர்ந்து எழுந்த

புது டில்லியில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இதற்கு விடை கிடைத்தது. காமராஜ்தான் அடுத்த காங்கிரஸ் தலைவராக வேண்டும்' என்று நேருஜி தம்முடைய விருப்பத்தை வெளியிட்டார். அவருடைய விருப்பப்படி காம்ராஜையே அடுத்த தலைவராகத் தேர்ந் தெடுப்பதென்று முடிவாயிற்று. இது காமராஜுக்குத் தெரியாது.

இது சம்பந்தமான பேச்சு அடிபட்டுக்கொண்டிருந்தபோது நான் டில்லிக்குப் போயிருந்தேன்.காமராஜூடன் சில நாட்கள் மெட்ரர்ஸ் ஹவுஸில் தங்கியிருந்தேன். அச்சமயம் அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு யார் வரப்

83

83