பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போகிரு.ர்கள் என்பது பற்றி எல்லாப் பத்திரிகைகளிலும் ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. நாட்டு மக்களும் யார் தலைவர் என்பதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டி ருந்தார்கள்.

ஒருநாள் காமராஜ் அன்றைய காலப் பத்திரிகைகளில் வெளியான செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து, “காங்கிரசின் அடுத்த தலைவராகச் சாஸ்திரியைப் போடலாமே?” என்றேன். நான். - . . . . . .

'போடலாம். ஆனல் அவர் ஒப்புக் கொள்ள மாட்டேங் கிருரே, என்ன செய்ய? மறுபடியும் அவரைப் பார்த்துப் பேசி ஒப்புக் கொள்ளச் செய்யனும்" என்ருர் காமராஜ்.

காலையில் டிபன் சாப்பிடும்போது இந்தப் பேச்சு நடந்தது. பகல் உணவுக்குக் காமராஜ் நேருஜியின் இல்லத்திலிருந்து மெட்ராஸ் ஹவுஸிற்குத் திரும்ப வந்தார்.

அதற்குள் காமராஜ்தான் அடுத்த தலைவர் என்று தீர்மான மாகி விட்டது.

'என்ன இப்படி...” என்று நான் இழுத்தேன். “எனக்கு ஒன்றும் தெரியாது. சஞ்சீவ ரெட்டியும் அதுல்ய கோஷ-ம் சேர்ந்து காதைக் கடிச்சுக்கிட்டிருந்தாங்க. திடீர்னு நேரு என் பேரைச் சொன்னர். எல்லாரும் கையைத் தூக்கிட் டாங்க. நான் என்ன செய்வேன்?" என்ருர் காமராஜ்.

'இதைப் பற்றி நேருஜி உங்களிடம் ஒண்ணுமே சொல்ல 'அஞ்சாறு மாசத்துக்கு முன்னலே அவர் என்ன ஹைதராபாத்திலே சந்திச்சப்போ அதைப் பற்றி பிரஸ் தாபிச்சார். நான் வேண்டாம், அவ்வளவு பெரிய பாரத்தை என் தலைமீது வைக்காதீங்கன்னு சொன்னேன். அதோடு நான் முதலமைச்சர் பதவியை ராஜிநாமாச் செய்ததே தமிழ் நாட்டில் கட்சி வேலை செய்யனுங்கிறதுக்குத் தான்னும் சொன்னேன். அப்ப சும்மா இருந்துட்டார். அது அவர் மனசிலேயே . இருந்திருக்கும் போல இருக்கு இப்ப திடீர்னு இப்படி

செஞ்சுட்டார்.'

84

84