பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராஜே தலைமைப் பதவிக்கு ஏற்றவர் என்று நேருஜி முடிவு செய்ததற்கு என்ன காரணம்? ஒன்ரு. இரண்டா, எத் தனையோ காரணங்கள்:

1. காமராஜ் திட்டத்துக்குப் பிறகு அவருடைய புகழ் நாட்டு மக்களிடையே இரட்டிப்பாகப் பெருகியிருந்தது.

2. பதவி மீது அவருக்குத் துளியும் பற்றுதல் இல்லை என்பது. . - .

3. முதலமைச்சர் என்ற முறையில் சென்னை ராஜ்யத்தின் நிர்வாகத்தை ஒன்பதாண்டுக் காலம் மிகச் சிறப்பாக, துல்ய மாக நடத்தி வந்தது. -

4. காங்கிரஸ் தலைமைப் பதவிக்குப் போட்டியின்றித் தேர்ந் தெடுக்கப்படக் கூடிய தகுதி அவர் ஒருவருக்கே இருந்தது.

5. தமக்குப் பிறகு காங்கிரஸ் ஸ்தாபனத்தை நல்ல முறை யில் நடத்திச் செல்லக் கூடிய ஆற்றல் உள்ளவர் என்று நேருஜி. எண்ணியது. -

அடுத்த காங்கிரஸ் தலைவர் காமராஜ் என்று அறிவிக்கப்பட் டதும் தமிழ் மக்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடத் தொடங்கி

- - - - ." . تاريL

புவனேசுவர் காங்கிரஸ் மாநாட்டில் கூடிய ஆயிரக்கணக் கான தமிழ் மக்களே அதற்குச் சான்று. -

1926-இல் கெளஹாதி காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் திரு. எஸ். சீனிவாசய்யங்கார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற் குப் பின் தமிழ் நாட்டிலிருந்து காமராஜே அந்த மாபெரும் பதவியை வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புவனேசுவரில் கூடிய மாநாட்டில் காமராஜ் தம்முடைய தலைமைப் பேருரையைத் தமிழிலேயே நிகழ்த்தினர். கருத்து மிக்க அந்தச் சொற்பொழிவைத் தமிழிலேயே காமராஜ் . படிக்கக் கேட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பெரு, மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்த மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது போல் ஆகி விட்டது அச்சமயம் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி.

அதுதான் அந்த மாநாட்டுக்கு வந்திருந்த நேருஜியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அது காரணமாக அவர் மாநாட்டுப்

55

85