பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கிடையாது.” "அவரைத் தனியாச் சந்திச்சுப் பேசியிருக்கீங்களா?” "ஒரு முறை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு எதுக்கோ போயிருந் தேன். அப்ப அவரும் அங்கே படுத்திருந்தார். உடல் நலம் பற்றி விசாரிச்சுட்டு வந்தேன்; அவ்வளவுதான்.' - . . .

"எஸ். சீனிவாசய்யங்காரைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?" 'அட்ாடா! எப்பேர்ப்பட்ட லீடர்!” என்று கூறிய காம. ராஜ் உணர்ச்சி வசப்பட்டவராய் இரண்டு கைகளையும் தூக்கிக் காட்டி, "ஆகா!' என்று சூள் கொட்டி வியப்பொலிகளை உதிர்த்து விட்டுச் சொன்னர். x

'அந்த காலத்திலே சுபாஷ் ப்ோஸ், சீனிவாசய்யங்கார், நேரு - இவங்க ஆரம்பிச்ச இந்தியா லீக்' கொள்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நானும், அதை ஆதரிச்சேன். ஆன எந்தக் கொள்கையும் காந்திஜியை எதிர்க்க வந்தால் அதோடு சேர எனக்கு மனம் வராது. அது என்னல் முடியவும் முடி

"1929-இல் காங்கிரளிலிருந்து விலகி விட்டார் சீனிவாசய் யங்கார். அவரை மறுபடியும் காங்கிரசுக்குள்ளே கொண்டு வரணும்னு அபேதவாதிகள் சிலர் முயற்சி பண்ணுங்க. நான் அதுக்கு ஒத்துழைச்சா. அய்யங்கார் மறுபடியும் கர்ங்கிரஸ் பிரசிடெண்டா வந்துடலாம்னு சொன்னங்க. அவரே என் கிட்டே வந்து பேசிஞர். ... . - - -

நான் கேட்டேன். நீங்க காங்கிரசுக்குள்ளே வந்து என்ன செய்ய போlங்கன்னு. காந்தியை எதிர்ப்பேன்னு சொன்னர். அது எனக்குப் பிடிக்கல்லே. காந்தியை எதிர்க்கிறதுங்கிறது நடக்காத காரியம். அதுக்கு நான் உடன்பட மாட்டேன்"னு

சொல்லி அனுப்பிச்சுட்டேன்."

'நேரு - படேல் இவங்க ரெண்டு பேருக்குள்ளே அடிக்கடி தகராறு நடக்குமாமே ; அது உங்களுக்குத் தெரியுமா? அதுக்கு என்ன காரணம்?' என்று காமராஜிடம் கேட்டேன்.

“ஜெலசிதான் காரணம். காந்தி இருக்கிற போதே அவங் களுக்குள்ளே இந்த ட்ரபிள் ஆரம்பமாயிட்டுது. அப்ப வல்ல பாய், ராஜாஜி. ராஜன் பாபு, பஜாஜ், இன்னும் ஒருத்தர் ஆக

88

88